தவிடு - Thavidu
s. (oblique தவிட்டின்), bran.
தவிட்டுக்களி, a thick pap of bran. தவிட்டுக்கிளி, a small locust. தவிட்டுகொழுக்கட்டை, cakes made of bran. தவிட்டுநிறம், brown, dim colour. தவிட்டுப்புறா, a turtle dove. தவிட்டுப்பேன், a small louse. தவிட்டுமயிர், brown hair; first down of birds. அரிசித்தவிடு, rice-bran. உமித்தவிடு, inferior bran containing husk.
கொழுமை - kozumai
s. fatness, plumpness, luxuriance, fertility, கொழுப்பு; 2. good circumstances, wealth வளமை; 3. beauty, அழகு; 4. agreeable colour, நிறம்; 5. coolness, குளிர்ச்சி.
கொழு, adj. fat, rich, fertile. கொழுக்கட்டை, a kind of cake. கொழுமதி, fertility of the soil, self-conceit. கொழுமையாய் வளர்க்க, to train a child in luxury.