தீர்க்கம் - Thiirkkam
s. length, extension, நீளம்; 2. distinctness, தெளிவு; 3. perfection, accuracy, பூரணம்; 4. positiveness, certainty, திட்டம்; 5. distance, remoteness, தூரம்.
தீர்க்க சதுரம், a parallelogram. தீர்க்கசந்தி, (Gr.) a kind of combination of Sanskrit words by which 2 similar vowels long or short coalesce into one long vowel. தீர்க்க சுமங்கலி, a woman blessed with long enjoyment of the marriage state (used in congratulation). தீர்க்கதண்டம், prostration at full length. தீர்க்கதரிசனம், (Chr. us.) prophecy. தீர்க்கதரிசி, a prophet (fem. தீர்க்கதரி சனி). தீர்க்க நித்திரை, long sleep; 2. Euphemistic) death. தீர்க்கமாய்ப்படிக்க, to read distinctly. தீர்க்கயோசனை, தீர்க்காலோசனை, mature consideration. தீர்க்கவசனம், decisive language. தீர்க்கவைரம், cherished hatred. தீர்க்காயுசு, long life. தீர்க்காயுஷ்யம், (a salutation), length of days. தீர்க்காயுதம், a spear, a lance.
தாமரை - Thaamarai
s. the lotus, or water lily.
செந்தாமரை, வெண்டாமரை, ஓரிதழ்த்-, ஆகாசத்-, நிலத், கற்றாமரை, several kinds of the lotus. தாமரைக்கண்ணன், Vishnu, the lotus-eyed. தாமரைக்காய், the pericap of the lotus. 2. the heart. தாமரைக்கொட்டை, -மணி, the seeds of the lotus. தாமரை நண்பன், -நாயகன், the sun as lord of lotus. தாமரை நாளம், the stalk of the lotus. தாமரைநூல், the fibre of the lotus stalk. தாமரைப்பூ, தாமரசபுஷ்பம், the lotus flower. தாமரையாசனன், Brahma, the lotus-seated, தாமரையான். தாமரையாசனி, Lakshmi, தாமரையாள். தாமரையிலை நீர், the globular crystallike water drops on the lotus leaf, which are ever in motion not sticking to the leaf; 2. (Fig.) a troubled mind; 3. (Fig.) the state of living a worldly or family life without any attachment for worldly things. தாமரைவளையம், coils of the lotus stalk. படர்தாமரை, படுதாமரை, the ring worm.
காலன் - Kaalan
s. Yama, the god of death, யமன்; 2. the minister of death, attendant on Yama; 3. Saturn, சனி.
காலகாலன், Siva who overcame Yama. காலதண்டம், the club of Yama, death. காலபாசம், the noose of Yama. காலாந்தகன், (காலன்+அந்தகன்) Siva who overcame Yama; 2. a very wicked person; 3. a very active or dexterous person (like Yama).
From Digital DictionariesMore