குற்றம் - Kuttram
s. fault, பிழை; 2. guilt, crime, தீங்கு; 3. stigma, பழி; 4. bodily deformity, அங்கக்குறை; 5. penalty, fine, அபராதம்.
குற்றங்காண, to find fault, to pick holes. குற்றங்குறைகள், grievances. குற்றச்சாட்டு, --ச்சாட்டம், accusation. குற்றஞ்சாட்ட, --சுமத்த, to accuse; to incriminate. குற்றஞ் சுமக்க, to be guilty. அவன்மேல் குற்றஞ் சுமந்தது, he has been found guilty. குற்றத்தை மறைக்க, to deny the crime, to hide a fault. குற்றமின்மை, --மில்லாமை, innocence. குற்றம் செய்ய, --பண்ண, to commit a fault or crime. குற்றம்பார்க்க, --பிடிக்க, to find fault. குற்றவாளி, an offender, one who is found guilty, a malefactor, a criminal.
வீசு -
III. v. i. blow (as the wind); 2. spread (as heat, odour etc.), பரவு; 3. fan, beat or dash against, as rain or wind, மோது; v. t. emit a smell or rays, பரப்பு; 2. cast or let down a net, fling, throw a stone, எறி; 3. brandish, flourish a sword, அசை; 4. give liberally, ஈ; 5. flog, அடி.
காற்று வீசுகிறது, the wind blows. கத்தியை வீச, to brandish a sword. அனல் வீசுகிறது, the heat radiates. கைவீசி நடக்க, to swing arms in walking. தூவானம் வீசுகிறது, the wind drives in drops of rain. சூரியன் கதிர் வீசுகிறது, the sun darts its beams. வலையை வீச, to cast the net. வீசல், v. n. throwing, giving liberally etc. வீச்சு, v. n. a throw, a stroke; 2. an impulse or oscillation, ஆட்டம்; 3. strength, வலி. ஒரே வீச்சாய், -வீச்சிலே, at one blow or stroke. வீச்சாட்டம், extension of space; 2. (fig.) good circumstances. வீச்சு வீச்சென்று நடக்க, to walk quickly.