தாங்கு - Thaangu
III. v. t. bear up, support, assist, தாபரி; 2. ward off, keep off, விலக்கு; 3. bear, suffer, endure, tolerate, சகி; 4. carry, சும; 5. protect, guard, கா; 6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து; 7. suffice.
எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it. அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him. என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much. காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind. தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness. தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking. பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking. தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly. தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.
சந்தேகம் - Santhegam
s. doubt, uncertainly, ஐயம்; 2. suspicion, சமுசயம்; 3. want (as in சாப்பாட்டுக்குச் சந்தேகம், nothing to eat).; 4. peril, அபாயம்.
சந்தேகந்தீர்ந்தது, -தெளிந்தது, அற்றது, the doubt is removed or cleared up. சந்தேகக்காரன், a man given to suspicion; an irresolute or wavering man, சந்தேகி. சந்தேகப்பட, சந்தேகங்கொள்ள, to doubt, to suspect. சந்தேகமாயிருக்கிறது, it is doubtful, dubious, uncertain. பரமசந்தேகம், a strong suspicion. சந்தேகவாரணம், clearing of doubts. சந்தேகாலங்காரம், a figure of speech, ஐயவணி.
சாப்பிடு - Saappidu
சாப்படு, VI.
v. t. eat, take food, medicine etc., drink,
உட்கொள்; 2. misappropriate as in
சர்க்கார் பணத் தைச் சாப்பிட்டுவிட்டான்.
பால், (மருந்து) சாப்பிட, to take milk (medicine). சாப்பிட அழைக்க, சாப்பாட்டுக்குச் சொல்ல, to invite to a meal. சாப்பாடு, food, meal. சாப்பாட்டுக் கடை, a hotel; 2. the serving of food. சாப்பாட்டுக்கு அமரிக்கை பண்ண, to get a meal prepared. சாப்பாட்டு ராமன், a glutton; a blockhead; a good-for nothing fellow. தடிக்கம்புச் சாப்பாடு, flogging with a cudgel.
From Digital DictionariesMore