விகிதம் - Vigitham
s. prescribed rule, விதிமுறை; 2. proportion ratio, வீதம்; 3. propriety, தகுதி; 4. intimacy, harmony, friendship, சிநேகம்.
நட - Nada
VII. v. i. walk, proceed, செல்; 2. behave; 3. come to pass, happen, occur, சம்பவி; 4. succeed, சித்தி; 5. be usual, வழங்கு; 6. in progress as a performance or transaction.
எனக்கும் அவனுக்கும் சிநேகம் நடக் கிறது, we keep friendship together. அவனுக்கு நன்றாய் நடக்கிறது, he has great influence. 2. he is hospitally entertained. நடக்கிற (நடப்பின்) காலம் a time of prosperity, செல்காலம். நடக்கை, v. n. walk, behaviour, conduct; 2. course, career, ஒழுக்கம். நடத்தல், v. n. walking, behaving; 2. see under நடத்து. நடந்தகாரியம், an event, a fact, நடந்த செய்தி, --சமாசாரம். நடந்தகாரியத்தைச் சொல்லு, tell what happened. நடந்தநடக்கை, deportment, proceedings. நடந்த வார்த்தை, the talk that passed between us. நடந்துகொள்ள, to behave. நடந்துவர, to come walking, to occur at all times. எங்கும் அப்படி நடந்துவருகிறது, it is so everywhere. நடந்தேற, to be accomplished, to come to pass, to be perfected or completed. நடபடி, நடபடிக்கை, act conduct. நடப்பன, those that walk, all movable things (opp. to நிற்பன, immovabe objects). நடப்பு, v. n.> frequent going, going and coming, a passage, a path; 2. behaviour, conduct; 3. prosperity. நடப்பு வட்டி, current rate of interest. நடப்பான வழி, a frequented path. நடப்பற்ற வழி, a way seldom used. நடவாதகாரியம், an unusual thing, an impossibility. நடவாத நடத்தை, foolish or immoral conduct.
கடுமை -
s. severity, cruelty, அகோரம்; 2. rigor, rigidness strictness கண்டிப்பு; 3. excessiveness, intensity, மிகுதி; 4. vehemence, furiousness, மூர்க்கம்விரைவு; (see அருமை note).
கடிய, கடு (before vowels கட்டு) adj. vehement, severe, strong, great. கடியது, கடிது, that which is severe. கடியவன், கடியன், a cruel man. கடியவார்த்தை, கடுஞ்சொல், an angry expression, harsh word. கடுங்கண்; cruelty. கடுங் காய்ச்சல், violent fever. கடுங்காரம், powerful caustic. கடுங்காற்று, a furious wind. கடுங்கோடை, intense heat, severe drought. கடுங்கோபம், vehement anger, wrath. கடுஞ் சிநேகம், excessive intimacy. கடு நடை, a hard walk. கடுந்தரை, hard soil. கடும்பத்தியம், strick diet. கடுமுள், weapons in general. கடுமூர்க்கம், vehemant anger, fury. கடுமூர்க்கன், a furious man. கடுவாயன், a rough angry speaker. கடுவிலை, exorbitant price. கடுவெயில், burning sun. கடுவெளி, a barren plain. கட்டழகி, a woman of great beauty. கட்டழகு, great beauty. கட்டழல், a vehement fire. கட்டாண்மை, great bravery. கட்டிளமை, very tender age.
From Digital DictionariesMore