அற்பம் - Arpam
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
தினை - Thinai
s. millet, panicum italicum, சாமை; 2. trifle, சிறுமை.
தினைக்கஞ்சி, millet gruel. தினைப்புனம், -ப்புலம், a millet-field. தினைமா, millet-meal. தினையளவு, as much as a grain of millet, a trifle. தினையளவும் உதவுவான், he will not help in the least. செந்தினை, red millet.
கணம் - Kanam
s. smallness, minuteness, a trifle, சிறுமை; 2. a measure of time equal to 4 minutes; 3. a moment, க்ஷணம்; 4. flock, multitude, class, group, கூட்டம்; 5. demon, devil, பிசாசு; பேய்; 6. globularity, திரட்சி; 7. circle, வட்டம்; 8. trifle, triviality, அற்பம்.
கணநாதர், --நாயகர், the attendants of Siva. கணந்தோறும், every moment. கணபதி, கணேசன், Ganesa, the son of Siva & Parvathi, the god of wisdom. கணப்பொழுது, (க்ஷணப்பொழுது) a moment. இக்கணம், this moment. கணவர், members of a group or assemblage.
From Digital DictionariesMore