உறுதி - Uruthi
s. firmness, strength, compactness, திரம். 2. benefit, நன்மை; 3. certainty, assurance, நிச்சயம்; 4. support, prop, ஆதாரம்; 5. learning, கல்வி; 6. bond, voucher, ஆட்சிப் பத்திரம்.
உறுதிக்கட்டுரை, admonition, remonstrance. உறுதிச்சீட்டு, written contract, bond. உறுதிச்சுற்றம், the principal attendants on a king. உறுதி சொல்ல, to speak firmly. உறுதிச் சொல், assurance, advice, admonition. உறுதி பூசுதல், confirmation (R. C. us.) உறுதிப்பட, to be confirmed, assured. உறுதிப்படுத்த, --பண்ண, to confirm. establish, corroborate. உறுதிப் பத்திரம், a bond, title-deed. உறுதிப்பாடு, firmness, promise, assurance. உறுதிமொழி, see உறுதிச் சொல். உறுதிப்பொருள், divine wisdom, and God. உறுதியர், messengers of the state, தூதர். உறுதியாய்ப் பிடிக்க, to hold fast, to insist upon.
கிளை - Kilai
s. a branch, மரக்கொம்பு; 2. twig, bough, sprig, தளிர்; 3. relations, kindred, சுற்றம்; 4. group, company, கூட்டம்; 5. section, division, பகுப்பு; 6. bamboo, மூங்கில்; 7. a kind of flute.
கிளைக்கதை, an episode. கிளைஞர், relations. கிளைக்கேள்வி, supplementary question. கிளைநறுக்க, to prune, to lop. கிளைமை, relationship, friendship. கிளையார், கிளைஞர்relations, friends. கிளைவழி, உறமுறை வழி, lineage; a branching street. கிளைவிட, -ஓட, to put forth twigs, to ramify. நெடுங்கிளை, a straight branch. பக்கக்கிளை, a by-shoot.
இனம் - Inam
s. a kindred, relationship, சுற்றம்; 2. class, sort, குலம்; 3. company, flock, herd, திரள்; 3. equality, ஒப்பு; 4. individual, ஆசாமி; 5. brotherhood, fellowship, society, company.
"இனம் இனத்தோடே, வெள்ளாடு தன் னோடே" Proverb "Geese with geese and women with women". "Birds of a feather flock to-gether" அதற்கு இனம் பண்ணினான், (பண்ணி வைத்தான்), he adopted proper measures to effect it. இனக்கட்டு, alliance, union between relations. இனசனம், இனத்தார், இனத்தவர், சனத் தார், kinsfolk, relations. இனமாய்ச்செய்ய, to do a thing properly. இனமாய்ச்சொல்ல, to speak with propriety. இனமும் சனமுமாயிருக்க, to have money, relatives and dependents. இனம்பார்த்துக் கொண்டிருக்க, to look for proper means, to await an opportunity. இனம் பிரிக்க, to divide into classes. இனம்பிரிய, to be separated from the kinsfolk. இனவழி, descent from the same line or ancestry. இடையினம், the six middle sounding consonants. மெல்லினம், the six soft-sounding consonants. வல்லினம், the six hard-sounding consonants. இனவெழுத்து, kindred letters.
From Digital DictionariesMore