காடு - Kaadu
s. an uncultivated tract of land covered with forest trees, brushwood etc; jungle, ஆரணியம்; 2. a forest, wood, வனம்; 3. waste land. பாழ் நிலம்; 4. burning place. சுடுகாடு; 5. (in comb.) wild, rough, uncultivated; 6. a nominal termination as in சாக்காடு; நோக்காடு etc; 7. dry land புன்செய்; 8. chaff, straw etc. செத்தை; 9. plenty, abundance மிகுதி.
நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated. காடாரம்பம், land where dry grain is grown. காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water). காடுபடு திரவியம், forest productions. forest produce. காடுவாரி, a rake, one who scrapes up all he can. காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe. காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc. காடுவெட்டி, a wood-cutter. காடோடி, a savage, rustic. காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow. காட்டாடு, a wild sheep. காட்டாள், a clown, a boor. காட்டுக்கீரை, different kinds of greens mixed together. காட்டுக்கோழி, a jungle fowl. காட்டுத்தனம், rusticity, uncultivated manners. காட்டுப்பன்றி, a wild boar. காட்டுப்பிள்ளை, a foundling. காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc. காட்டுப்புத்தி, rusticity, stupidity. காட்டுப்புறா, a wild dove. காட்டுமரம், a wild tree; காட்டுமிருகம், a wild beast. காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage. காட்டெருமுட்டை, dried cow-dung found in fields. காட்டேணி, a bison, காட்டா. காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness. இடுகாடு, burial ground. குடிக்காடு, a village. சுடுகாடு, a place for burning the dead. பருத்திக்காடு, a cotton field. பிணக்காடு, a field covered with corpses. புகைக்காடு, great smoke. புல்லுக்காடு, pasture land, a meadow. புன்செய்க்காடு, high dry land. வயற்காடு, a paddy field. வெள்ளக்காடு, a general flood, inundation. நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.
புழு - Puzhu
s. a worm, a mite, a maggot, கிருமி.
புழு அரித்தல், -மேயல், v. n. being worm-eaten; 2. causing irritation, as animalcule in eruptions; 3. as புழுக் கடி 1. புழுக்கடி, -வெட்டு, a disease that makes the hair fall off; 2. anything worm-eaten. புழுக் கூடு, புழுக் குரம்பை, a chrysalis, the cocoon; 2. fig. the body. புழுக் கொத்தி, a kind of bird, the hoopoe bird, புழுக்குத்தி. புழுக் கொல்லி, a plant which counteracts the poison of worms, aristolochia. புழுப் புழுக்க, புழு வைக்க, to breed as worms, to be eaten up by worms. புழுப்புழுத்துச் செத்தான், he died being eaten up by worms. பச்சைப்புழு, a caterpillar.
ஓ - Oo
interj. (implying admiration or pity), behold, alas! as in ஓ ஓ பெரியன், behold what an illustrious person he is! ஓ, ஓ, காரியங்கெட்டுப்போயிற்று, alas! the matter is utterly ruined, 2. interrog. affix. (implying doubt or negation) as in அவனோ வந்தான், is it he (doubtful) that came? படிக்கவோ வந்தாய், did you come to learn? (no, but to play), நானோ சொன்னேன், did I say so? நீ செய்தாயோ, did you do it? (no); (N. B. In addressing God or oneself the interrog. sign, ஓ is considered elephant); 3. conjunctive affix. (implying doubt) whether, as in அவன் வருவானோ தெரியாது, I do not know if he will come; 4. connective affix. (with following emphatical, ஏ, தான் or எல்லாம்,) குரு எப்படியோ அப்படியே சீஷனும், the disciple will be just like his master, அவர் என் னென்ன சொல்லுகிறாரோ, அதை எல் லாம் செய், do whatever he says; 5. adversat. affix. (also ஓவென்றால்) but, as in நான் அழைத்தேன் அவனோ (வென்றால்) வரவில்லை, I called him but he did not come; 6. conditional affix. (implying warning), நீ அதைச் செய்தா யோ செத்தாய், if you do that, you are dead; 7. affixed to an interrogative, it expresses ignorance or great doubt, as in அவன் ஆரோ, I know not who he is.
From Digital DictionariesMore