பொது - Pothu
s. what is public, common, usual or universal, சாதாரணம்; 2. the genus as distinguished from the species, பொதுவினம்; 3. a public assembly, சபை.
சாகிறதெல்லாருக்கும் பொது, death is the lot of all. எல்லா நோய்க்கும் பொதுமருந்து, a universal remedy, a panacea. பொதுக்கட்ட, -க்கட்டிவைக்க, to sequestrate; 2. to deposit by mutual consent with an arbitrator. பொதுக் காரியம், a public affair. பொதுச் சூத்திரம், -விதி, a general rule. பொதுச்சொல், a general term; 2. (in gram.) a word common to both திணை or to two or more genders. பொதுஸ்திரி, -மகள், -ப்பெண், -மடந் தை, a public woman, a prostitute. பொதுநன்மை, public good. பொதுநிலம், common land. பொதுப்பட, generally, commonly. பொது மனுஷன், -மனிதன், பொதுவன், a mediator. பொதுமுதல், common stock in trade. பொதுவிலே எடுத்துச் செலவழிக்க, to expend out of the common stock பொதுவிலே சொல்ல, பொதுப்படப் பேச, to say or reproach without naming any body. பொதுவில், s. a public hall, அம்பலம்.
மட்டு -
s. measure, quantity,
அளவு; 2. limit, extent, boundary,
எல்லை; 3. moderateness,
மிதம்; 4. toddy, vinous liquor,
கள்.
அம்மட்டு, இம்மட்டு, so far, so much, that much. அம்மட்டில், அம்மட்டும், so far, அந்த மட்டும். எம்மட்டு, எம்மட்டும், how much? how far? எந்தமட்டும். மட்டாய், மட்டோடே, மட்டுக்கு மட் டாய், temperately, sparingly. மட்டாய்ச் செலவழிக்க, to be frugal. மட்டிட, மட்டுக்குறிக்க, to fix a limit. மட்டில்லாத, immense, infinite. மட்டில்லாமல், மட்டுத்தப்பி, immoderately. மட்டுக்கட்ட, -ப்படுத்த, -ப்பண்ண, to stint, to limit, to moderate; 2. to hinder, check; 3. to make an estimate. மட்டுக்கும், adv. so far, so much. மட்டுக்கோல், a measuring rod. மட்டுத்தப்ப, to exceed the propriety, to live extravaqantly. மட்டுப்பட, மட்டாய்ப்போக, to decreas, to be measured or limited. மட்டுப்படாதவன், a stiff-necked person. மழைமட்டுப்படுகிறது, the rain abates. மட்டுமரியாதை, -மதிப்பு, due regard, politeness; good, moral behaviour. மட்டு (மட்டுக்கு) மிஞ்சிப்பேச, to speak too much. மட்டும், until so far. அந்த ஊர்மட்டும், as far as that town. அம்மட்டும், இம்-, இம்மட்டுக்கும், only so much, just so far, hitherto. இந்நாள் மட்டும், till this day. இம்மட்டுந்தான், that is all, nothing more. நான் வருமட்டும், till I come. மட்டோடேயிருக்க, to be moderate.
சிந்து -
III. v. t. spill, shed, scatter, diffuse, சிந்திப்போடு; 2. remove, நீக்கு; 3. spend, waste, செலவழி; 4. cut off, வெட்டு; v. i. be spilled, சிந்திப் போ; 2. be destroyed; 3. trickle, சொட்டியொழுகு.
சிந்தாதே மங்காதே யெடுக்க, to take a thing up without spilling or spoiling. சிந்துண்டு போக, to be spilled or shed; to be destroyed. இரத்தம் சிந்த, to shed blood. கண்ணீர் சிந்த, to shed tears. மூக்குச் சிந்த, to blow the nose. வேர்வை சிந்த, to perspire.
From Digital Dictionaries