எழுத்து - Ezhuththu
s. a letter,
அட்சரம்; 2. a written letter, a writing, a painting, a bond,
சீட்டு; 3. destiny as written in the head; 4. signature,
கையெ ழுத்து; 5. Grammar,
இலக்கணம்; 6. entry, enrolment,
பெயர்ப் பதிவு.
அவனுக்கு எழுத்து இன்னம் படியவில்லை, he has no settled hand, his hand writing is not yet settled. எழுத்ததிகாரம், எழுத்திலக்கணம், (in gram.) orthography. எழுத்தறப் படிக்க, to read distinctly. எழுத்தாணி, an iron pen for writing on cadjan leaves; a style. Different kinds of style are; அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி, etc. எழுத்தாணிக் கூடு, a sheath for the iron pen. எழுத்தாணிப் பூண்டு, -ப்பச்சை, the name of a plant. எழுத்துக்காரன், a writer, a clerk; 2. a painter, a cloth painter. எழுத்துக் கூட்ட, to spell. எழுத்துக் கோக்க, to compose (types). எழுத்துச் சந்தி, -ப்புணர்ச்சி, union of letters in combination. எழுத்துச் சாரியை, particles used in naming any letter as கரம், காரம், and கான். எழுத்துப் பிழை, --ப்பிசகு, an error in writing or spelling. எழுத்துவாசனையறியாத, illiterate. எழுத்து வேலை, writing, cloth painting. இடையெழுத்து, the 6 middle-sounding letters (ய், ர், ல், வ், ழ், ள்). இளவெழுத்து, a hand not yet formed. இனவெழுத்து, kindred letters. கிறுக்கெழுத்து, a letter erased cancelled; a letter badly written. குற்றெழுத்து, a short vowel. கூட்டெழுத்து, double letters written in a contracted form. சிற்றெழுத்து, small letters. சுட்டெழுத்து, a demonstrative letter. சுருக்கெழுத்து, short hand. நிலவெழுத்து, letters written with the finger on the sand. நுணுக்கெழுத்து, a character ill written, too small and not legible. நெட்டெழுத்து, a long vowel. நெட்டெழுத்துக்காரன், the writer of a document. பேரெழுத்து, large letters. முதுவெழுத்து, a well settled hand. மெல்லெழுத்து, the six soft-sounding letters (ங், ஞ், ண், ந், ம், ன்). வல்லெழுத்து, the six hard-sounding letters (க், ச், ட், த், ப், ற்). வினாவெழுத்து, an interrogative letter.
பின் - Pin
adv. & prep. (
opp. to முன்) after, afterward,
பிறகு; 2. behind,
பிறகாலே; 3. a form of the seventh case; 4. cause, source,
காரணம்; 5. greatness, eminence,
பெருமை; 6. way, road,
வழி.
அதுக்குப் பின், afterwards, after it. அவன் போனபின், after he was gone. பிற்காரியம், that which is to come, the consequence. பிற்காலம், after-times, succeeding times. பிற்கொழுங்கோல், the twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. பிற்பகல், afternoon. பிற்பட, to be behind. பிற்பாடு, afterwards, after. பின்கட்டு, the hands pinioned behind, பின்கட்டாய்க் கட்டுதல்; 2. the second or back apartment of a house. பின்காட்ட, to turn the back (some, times in displeasure); 2. to turn the back to a foe. பின்சந்ததி, posterity. பின்சரிவு, afternoon, decline of the sun. பின்செல்ல, to follow another, to entreat. பின்தட்டு, பின்றட்டு, பின் தலை, the hind part of a ship, the stern. பின்தொடர, to pursue, to follow. பின்பக்கம், பிற்பக்கம், பிற்புறம், the back side. பின்பற்ற, to follow, to imitate. பின்பனி, பின்பனிக்காலம், the latter dewy season, February & March. பின்புத்தி, after-thought, indiscretion. பின்புறணி, slander, back-biting. பின்புறம், hinder side, the rear, back part. பின்போடுதல், v. n. postponing, deferring. பின்மழை, -மாரி, latter part of the rainy season. பின் (பின்னுக்கு) வருகிறது, that which follows; that which will happen in after-times. பின்வாங்க, to draw back; to recede; to backslide; to relapse from a promise, purpose, bargain etc. பின்வைக்க, to leave behind (as orphans), to postpone. பின்றோன்றல், a young brother, தம்பி. பின்னங்கால், the hind leg; 2. the hinder part of the foot. பின்னடி, latter part, future. பின்னடியார், posterity, descendants. பின்னந்தலை, the back part of the head, occiput. பின்னந்தொடை, the hind part of the thigh hind quarter of mutton. பின்னர், adv. after, afterwards, subsequently. பின்னாக, பின்னே, பின்னாலே, afterwards, behind (in time or place). பின்னிட, to go back, to retreat, to yield, to be reluctant, to be too late; 2. (loc.) to pass (time). பின்னிருட்டு, பின்னிருட்டுக்காலம், dark only in the latter part of the night. பின்னிலவு, the moon in its decrease. பின்னும், பின்னையும், moreover. பின்னேரம், afternoon. பின்னை, a younger sister, தங்கை; 2. Lakshmi as younger sister; 3. a younger brother, இளையவன்; 4. adv. besides, further, hereafter, பிறகு. பின்னோடே, presently, afterwards; 2. behind. பின்னோன், (pl. பின்னோர்) a younger brother, தம்பி; 2. one of the Sudra caste; 3. a close imitator of an original work.
இல்லை - Illai
defect. verb from the root இல், no, not, there is not; 2. neg. auxiliary verb
எனக்குப் பணம் இல்லை, I have no money. அவன் வந்ததில்லை, அவன் வரவில்லை, he is not come. வருகிறாயா இல்லையா, வருகிறாயோ இல் லையோ, will you come or not? இல்லை என்ன, to say no, to deny. இல்லையாகில், --யெனில், --யென்றால், -- யாயின், --யேல், if not, else, otherwise. இன்னதென்றில்லை, no matter what. ஒருகாலுமில்லை, never. ஒன்றுமில்லை, nothing. பரிச்சேதமில்லை, துப்புறவில்லை, இல்லவே யில்லை, not at all. அதைப்பற்றிச் சொல்ல நம்மால் இல்லை, அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை, in the sense of impossibility, and impropriety.
From Digital DictionariesMore