தொல்லை - Thollai
s. trouble, perplexity, vexation. care, தொந்தரை; 2. antiquity, oldness, பழமை, தொன்று.
அந்தப் பணம் என்தொல்லையிலே விழுந் தது, my necessity forced me to use that money. தொல்லைக் காரன், -யுள்ளவன், one involved in troubles and cares. தொல்லைப்பட, to be vexed or troubled. தொல்லைப்படுத்த, to trouble, to vex. சமுசாரத்தொல்லை, domestic cares. பலதொல்லையாயிருக்க, to have many works and cares to attend to.
தொந்தரவு - Thontharavu
தொந்தரை, s. trouble, vexation, difficulty, வருத்தம்.
தொந்தரையான வேலை, a difficult work. தொந்தரவுபண்ண, to trouble one.
உலர் - Ular
உலரு, II. v. i. grow dry, dry up, wither, காய்; 2. pine away, droop. வாடு.
உலரவைக்க, to dry, to make dry by exposing to the heat of the sun. உலர்ந்த தரை, dry land. உலர்ச்சி, (உலர்த்தி) v. n. dryness; emaciated state caused by hunger or disease. உலர்த்தற்பாடு, condition of being fully dried (opp. to ஈரப்பாடு)
From Digital DictionariesMore