உயர் - Uyar
உயரு, II. v. i. rise, grow high, வளரு; 2. rise above, மேலேறு; 3. be great, eminent exalted. மேன்மையுறு.
உயர்ச்சி, உயர்த்தி, உயர்பு, உயர்ப்பு, உயர்வு, v. ns. சம்பள உயர்வு, increase of salary. உயர்தர உத்தியோகஸ்தன், a high official. தாழ்மையே உயர்வுக்கு வழி, humility leads to elevation. உயர, adv. (inf.) on high, above, upward. உயர ஏற, -க்கிளம்ப, to ascend, rise, mount up. உயரப் பார்க்க, to look up, to look higher for promotion. உயரப்போக, to go up. உயர்குலம், உயர்ந்தகுலம், noble descent. உயர்திணை, (in gram.) the superior class (opp. to அஃறிணை) உயர்நிலம், a high place. உயர்ந்தசரக்கு, commodities of superior quality.
பதிவு - Pathivu
v. n. impression, அழுந்துகை; 2. depression, தாழ்வு; 3. lurking, lying in ambush, பதுக்கம்; 4. submission, தாழ்மை; 5. registration; 6. engrossment of the mind in an object or pursuit, ஊன்றுகை; 7. lowness of price, விலைத் தணிவு.
பதிவிடை, concealment; 2. an ambush, an ambuscade. பதிவிடையாய்ப் போய்விட, to go away in a mist, to steal away. பதிவிடைவைக்க, --பண்ண, to lay snarer or wait for one. பதிவுசெய்ய, to record, to register. பதிவுநிலம், low-land. பதிவுவைக்க, to enter in an account.
மனம் - Manam
s. the mind, will, intention. desire,
மனசு.
மனக் கசப்பு, rancor, hatred. மனக் கடினம், hardness of heart, obduration. மனக்கண், the eye of the mind, mental sight. மனக்கலக்கம், perturbation of mind. மனக்கவலை, anxiety of mind, care. மனக்களிப்பு, -ப்பூரிப்பு, -மகிழ்ச்சி, - மலர்ச்சி, cheerfulness, hilarity, joy. மனக்கிலேசம், -ச்சஞ்சலம், -ச்சலிப்பு, - த்துக்கம், -த்துயரம்,-நோய், -வியா குலம், grief, pain of mind. மனக்குறை, dissatisfaction, discontent. மனக்கூர்மை, sagacity, acumen. மனக்கோட்டம், -த்தழுக்கம், envy, dislike. மனங்கசக்க, to have a bitter feeling, to feel remorse. மனங்கசிய, to be tender, to melt as the heart. மனங் கரைய, to relent, to be sorry for. மனங்கனிய, to be tender in mind. மனங் குத்துதல், remorse, sting of conscience. மனங் கொதிக்க, to grieve, to rage with anger. மனங் கொள்ள, to be willing. மனங் கோண, to be offended, to be cross. மனச்சாட்சி, மனோசாட்சி, conscience. மனஞ் சலித்தல், being troubled in mind, wearied in spirit. மனத் தாழ்மை, humility. மனத் திடம், -வுறுதி, firmness of mind. மனத்தியானம், meditation. மனத் திருத்தி, contentment. மன நேர்மை, sincerity. மனநோக, to regret, to feel remorse. மனந்தளம்ப, to be unstable in mind, to be distressed with cares. மனந்தளர, to grow dispirited. மனந்திரும்புதல், turning of mind; 2. (chr. us.) conversion. மனப்பாடம், a lesson learnt by heart. மனப்பூரணம், contentment, willingness. மனப்பூர்வம், willingness. மனப்பூர்வமாய், மனப்பூரணமாய், most heartily. மனமடிவு, pain of mind, mortification. மனமுறியப்பேச, to speak so as to wound one"s feelings. மனமுறிவு, aversion. மனம்பிடிக்க, to the pleasing to the mind. மனபொருந்த, to consent, to like. மனம் பொறுக்க, to have patience. மன ரம்மியம், மனோரம்மியம், contentment. மன ராசி, மனோராசி, consent of will, agreement. மனலோடாயம், faint-heartedness, dejection. மனவருத்தி, desire of mind. மனவூக்கம், -வலி, mental energy. மனாகுலம், மனோகுலம் as மனக்கிலேசம். மனோகதி, quickness of mind, acuteness of perception. மனோகரம், மனோக்கியம், anything lovely, pleasing to the mind or beautiful; 2. pleasingness. மனோகரி, a lovely or beautiful woman. மனோசன், மனோபவன், மனோயோனி, மனோற்பவன், Kama, the Hindu மனோசாட்சி, conscience. மனோச்சாகம், மனோற்சாகம், freedom of mind; 2. as மனவூக்கம். மனோ நிச்சயம், resolution. மனோபிஷ்டம், மனோபீஷ்டம், pleasure. மனோமயம், a thought. மனோரஞ்சிதம், that which delights the mind. மனோரதம், desire, pleasure. மனோரமை, the daughter of mount Meru and wife of mount Himalaya. மனோராச்சியம் பண்ண, to build castles in the air. மனோலயம், extinction of will, மன வொடுக்கம். மனோலவுலியம், whim, freak, caprice, வீணினைவு. மனோலி, a wit, a joker, ஆசியக்காரன். மனோலித்தனம், wit pleasantry. மனோவாக்குக் கெட்டாதது, that which is in comprehensible and unspeakable. மனோவியாபாரம், the operation of the mind. மனோவிருத்தி, -விர்த்தி, the extension or improvement of mind. மனோவேகமாய், as fast as the thoughts run. மனோன்மணி, Parvathi (lit. a desirable superior gem); 2. mica, அப்பிரகம்.
From Digital DictionariesMore