திரும்பு - Thirumbu
III. v. i. turn, move round, turn about, வளை; 2. return, மீளு; 3. change, மாறு; 4. be changed, converted, குணப்படு; 5. be averted, விலகு; 6. retrogade, பின்னிடு.
காற்று திரும்புகிறது, the wind turns, changes, veers. விஷந் திரும்பிற்று, the poison is checked or counteracted. வியாதி திரும்புமுகமாயிருக்கிறது, the disease has taken a favourable turn. திரும்ப, adv. (inf.) again. திரும்பத் திரும்ப, again and again. திரும்பவும், again, furthermore, morerover. திரும்பவும் என்ன, what more, what else? திரும்பிப் பார்க்க, to look back. திரும்பிப் போக, to go back again. திரும்பி வர, to return.