இறங்கு - Irangu
III. v. i. descend, come down, flow down, drop down, தாழச்செல்லு; 2. disembark, கறையிறங்கு; 3. alight from a horse; 4. take up a lodging, halt, தங்கு; 5. abate, become reduced, தாழ்வடை; 6. fall from a higher state, நிலைகுலை.
இறக்கம், v. n. descending, a declivity; a descent; a ford. மழை இறக்கம், a shower of rain. நோயாளிக்குச் சோற்றிறக்கமில்லை, the patient has no appetite, he is unable to swallow food. இறங்கல், v. n. descending, dismounting, getting down a tree etc. இறங்காத்துறை, a place not convenient for landing; an improper marriage etc. இறங்குதுறை, a ford, a place of landing. இறங்குபொழுது, time of sun-set. ஏற இறங்கப்பார்த்தல், looking at one from foot to head and vice versa in anger and reproof.
வழி - Vazhi
s. a way, a road, நடப்பு; 2. path, பாதை; 3. a course of conduct, நடை; 4. manner, method, mode, வயணம்; 5. original cause, காரணம்; 6. usage, முறைமை; 7. a form of the 7th case, ஏழனுருபு; 8. a son, புத்திரன்; 9. a lump or ball, as of butter etc. திரட்சி; 1. antiquity, oldness, பழமை.
அவன் வழி போகாதே, do not meddle with him. வழிகட்டிப் பறிக்கிறவன், a highway man. வழிகாட்ட, to show the way, to guide morally. வழிகாட்டு, வழித்துணை, a guide, a leader. வழிகாட்டிமரம், a guide post. வழிச்சாரி, நடையான வழி, a trodden path, a beaten way or road. வழிச்செலவு, money for way expenses; 2. a journey. வழிதப்ப, -தப்பிப்போக, to go astray; to miss the way. வழி துறை, means to an end, auxiliary aid. வழிதுறை தெரியாமல் பேச, to speak without method. வழித்தோன்றல், a son, as வழி 8. வழிநடை நடக்க, to walk in the way. வழிபட, to turn into the good way, to obey; 2. to pay homage, to worship, வணங்க. வழிபயக்க, to give without refusal. வழிபாடு, adoration, worship; 2. obedience; 3. a way, a system, a religious profession, கோட்பாடு; 4. use, custom, habit. ஸ்திரிகளுக்குரிய வழிபாடு, the custom of woman, menses. வழிபார்க்க, to watch an opportunity; 2. to expect, to look forward to. வழிப்பயணம், a journey. வழிப்பயணம் பண்ண, to travel. வழிப்பறி, robbery on the highway. வழிப்பிரிவு, a place where two or more ways meet. வழிப்போக்கன், a way-faring man, a traveller. வழியனுப்ப, as வழிவிட 1. வழியாக, as a prep. by or through. உன் வழியாக, by your means. அந்த வீதி வழியாக, through that street. வழியுரைப்போர், messengers, தூதர். வழிவகை, means, resources, உபாயம். வழிவிட, to take leave of any one on a journey after proceeding some distance from respect or attachment; 2. to make a way for water to flow; 3. to contrive a way to relieve from difficulty; 4. to leave the right way.
நீர் - Neer
s. water, சலம்; 2. fluid, liquid, juice, இரசம்; 3. urine, மூத்திரம்; 4. nature, quality, குணம்; 5. state, condition, நிலை; 6. humours of the body, serum, lymph, புண்பொழி நீர்.
நீரடிமுத்து, நீரெட்டிமுத்து, a medicinal nut, jatropha montana. நீரசம், the lotus; the pomegranate. நீரடைப்பு, நீர்க்கட்டு, stoppage or suppression of urine, strangury, நீர்ச் சிக்கு. நீரதம், cloud, மேகம். நீரரண், security of a fortification surrounded by water. நீரரமகளிர், nymphs of the water. நீரழிவு, நீரிழிவு, diabetes; also நீர்க் கழிவு, நீர்ப்பாடு. நீராகாரம், water from cold rice for breakfast kept over night; 2. the sea, நீராழி. நீராசனம், நீராஞ்சனம், நிராஞ்சனம், holding a lighted wick in water in which turmeric and lime are dissolved and margosa leaves placed and waving it round the idol, ஓர் ஆலத்தி; 2. waving lighted sacrificial grass around ghee & casting it into the sacred fire. நீராட, to bathe. நீராடுதல், bathing; 2. the water in precious stones. நீராட்ட, to bathe another. நீராமைக்கட்டு, a kind of dropsy in the abdomen. நீராம்பல், the water lily; a kind of dropsy. நீராரம்பம், land dependent on irrigation (opp. to காடாரம்பம், wild cultivation.) நீராரை, நீருளாரை, a water-plant, marsilea. நீராலி, a droplet of water, a globule of water, நீர்த்துளி. நீராவி, steam; 2. a tank or well, கேணி. நீராவியந்திரம், a steam engine. நிராவி மரக்கலம், a steamer. நீராழி, the sea, கடல். நீராழிமண்டபம், a building in the middle of a tank. நீராளம், (prov.) liquid food; 2. mixed sweet toddy. நீரிட, நீர்விட, to pass urine. நீரிலா நிலம், a desert tract. நீரிறங்குதல், passing of urine; 2. forming as watery humours in any part of the body except the head. நீருடும்பு, a water lizard. நீருள்ளி, onion, வெண்காயம். நீரூற்று, a spring, a fountain. நீரெரிப்பு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுறுக்கு, dysury. நீரேற்றம், flood, tide, flow; 2. catarrh; 3. a dropsical swelling, ஓர்நோய். நீரொட்டி, நீராரை, an edible water plant. நீரோடி, a futter, a conduit, மதகு; 2. a timber in a roof forming a channel to carry of water. நீரோடை, a water-course. நீரோட்டம், a current, a stream. நீரோருகம், the lotus. நீர்கொள்ள, -கோக்க, to imbibe moisture, to catch cold. நீர்க்கடன், a ceremony of pouring water mixed with rape seed to satisfy the manes, திலோதகம். நீர்க்கட்டு, stoppage of urine. நீர்க்காகம், நீர்க்காக்கை, a kind of diving water-bird. நீர்க்காசம், asthma, humoral asthma aggravated by cold. நீர்க்கால், a water-channel. நீர்க்காவி, a kind of reddish colour in cloth, பூங்காவி; 2. a water-plant, கருங்குவளை. நீர்க்குஷ்டம், a kind of leprosy, நீர்க் குட்டம். நீர்க்குமிளி, --க்குமிழி, a water-bubble. நீர்க்குறிஞ்சா, a plant, asclepias asthmatica. நீர்க்கொள்ளுவான், நீர்கொள்வான், chicken pox. நீர்கோவை, dropsy. நீர்க்கோழி, a water-bird. நீர்ச்சலவை, bleaching cloth etc. நீர்ச்சாரை, a rat-snake. நீர்ச்சால், a large pot for storing water, a bucket. நீர்ச்சாவி, grain blighted from excess of water. நீர்ச்சிரங்கு, (com. சேற்றுப்புண், சேத்துப் புண்) soreness between the toes, caused by walking on muddy ground. நீர்ச்சிறுப்பு, scanty discharge of urine. நீர்ச்சீலை, a piece of cloth for covering the privities. நீர்ச்சுழல், -ச்சுழி, whirlpool. நீர்ச்சுனை, water pools, natural wells, holes made for getting water. நீர்ச்சூலை, hydrocele, commonly அண்ட வாயு. நீர்ச்சோறு, நீச்சோறு, boiled rice kept over night in water, பழஞ்சோறு. நீர்த்தாரை, a water spout, a passage for water; 2. (modestly) male organ. நீர்த்துறை, the entrance to a tank, river etc. நீர்த்தூம்பு, a spout, மதகு. நீர்நாய், the sea-dog. நீர்நாள், the 2th lunar asterism, பூராடம். நீர்நிலை, a tank; 2. depth of water. நீர்ப்பஞ்சு, a sponge, கடற்காளான். நீர்ப்பாடு, violent diarrhoea; 2. diabetes (of women); 3. drought. நீர்ப்பாம்பு, a water-snake. நீர்ப்பிரமியம், same as நீர்ப்பாடு, strangury (of men). நீர்ப்பீனசம், a kind of inflammation in the head with offensive discharges of mucus. நீர்மட்டம், water level. நீர்முள்ளி, a medicinal shrub, barleria longifolia. நீர்மேல் நெருப்பு, a herb cool to the touch but causing blisters afterwards ammonia debilis, கல்லுருவி. நீர்மோர், butter-milk diluted with water. நீர்வண்டு, a water-fly. நீர்வல்லி, the betel creeper, வெற்றிலைக் கொடி. நீர்வற்றம், ebb, ebbing. நீர்வாரம், paddy that grows by tanks or in marshy ground, நீவாரம்.
From Digital DictionariesMore