வழி - Vazhi
s. a way, a road, நடப்பு; 2. path, பாதை; 3. a course of conduct, நடை; 4. manner, method, mode, வயணம்; 5. original cause, காரணம்; 6. usage, முறைமை; 7. a form of the 7th case, ஏழனுருபு; 8. a son, புத்திரன்; 9. a lump or ball, as of butter etc. திரட்சி; 1. antiquity, oldness, பழமை.
அவன் வழி போகாதே, do not meddle with him. வழிகட்டிப் பறிக்கிறவன், a highway man. வழிகாட்ட, to show the way, to guide morally. வழிகாட்டு, வழித்துணை, a guide, a leader. வழிகாட்டிமரம், a guide post. வழிச்சாரி, நடையான வழி, a trodden path, a beaten way or road. வழிச்செலவு, money for way expenses; 2. a journey. வழிதப்ப, -தப்பிப்போக, to go astray; to miss the way. வழி துறை, means to an end, auxiliary aid. வழிதுறை தெரியாமல் பேச, to speak without method. வழித்தோன்றல், a son, as வழி 8. வழிநடை நடக்க, to walk in the way. வழிபட, to turn into the good way, to obey; 2. to pay homage, to worship, வணங்க. வழிபயக்க, to give without refusal. வழிபாடு, adoration, worship; 2. obedience; 3. a way, a system, a religious profession, கோட்பாடு; 4. use, custom, habit. ஸ்திரிகளுக்குரிய வழிபாடு, the custom of woman, menses. வழிபார்க்க, to watch an opportunity; 2. to expect, to look forward to. வழிப்பயணம், a journey. வழிப்பயணம் பண்ண, to travel. வழிப்பறி, robbery on the highway. வழிப்பிரிவு, a place where two or more ways meet. வழிப்போக்கன், a way-faring man, a traveller. வழியனுப்ப, as வழிவிட 1. வழியாக, as a prep. by or through. உன் வழியாக, by your means. அந்த வீதி வழியாக, through that street. வழியுரைப்போர், messengers, தூதர். வழிவகை, means, resources, உபாயம். வழிவிட, to take leave of any one on a journey after proceeding some distance from respect or attachment; 2. to make a way for water to flow; 3. to contrive a way to relieve from difficulty; 4. to leave the right way.
உறுதி - Uruthi
s. firmness, strength, compactness, திரம். 2. benefit, நன்மை; 3. certainty, assurance, நிச்சயம்; 4. support, prop, ஆதாரம்; 5. learning, கல்வி; 6. bond, voucher, ஆட்சிப் பத்திரம்.
உறுதிக்கட்டுரை, admonition, remonstrance. உறுதிச்சீட்டு, written contract, bond. உறுதிச்சுற்றம், the principal attendants on a king. உறுதி சொல்ல, to speak firmly. உறுதிச் சொல், assurance, advice, admonition. உறுதி பூசுதல், confirmation (R. C. us.) உறுதிப்பட, to be confirmed, assured. உறுதிப்படுத்த, --பண்ண, to confirm. establish, corroborate. உறுதிப் பத்திரம், a bond, title-deed. உறுதிப்பாடு, firmness, promise, assurance. உறுதிமொழி, see உறுதிச் சொல். உறுதிப்பொருள், divine wisdom, and God. உறுதியர், messengers of the state, தூதர். உறுதியாய்ப் பிடிக்க, to hold fast, to insist upon.
வாயில் - Vaayil
com. வாசல், s. a door-way, a gate-way, entrance; 2. the organs of sense, பொறி; 3. the mouth and other avenues to the body, நலத்து வாரம்; 4. cause, காரணம்; 5. a message, தூது.
வாயிலாளர், வாயில் காப்போர், doorkeepers. வாயிலோர், dancers, கூத்தர்; 2. messengers, தூதர்; 3. as வாயிலாளர். வாயிற்காட்சி, perception of the senses.
From Digital DictionariesMore