தீண்டு - tintu
III.
v. t. touch,
தொடு; 2. infect or infuse poison by contact, contaminate,
தொற்று; 3. envenom,
விஷந் தீண்டு; 4. deflower,
கற்பழி.
விஷந்தீண்டிச் செத்தான், he died of snake bite. என்னைத் தீண்டாதே, touch me not. தீண்டாச்சாதி, low castes that are not to be touched. தீண்டுகை, v. n. touching. கிராணம் தீண்ட, to become eclipsed (as the sun or the moon).
தொத்து - tottu
தொற்று, III.
v. t. taint, infect 2. cleave, adhere to,
ஒட்டு;
v. i. spread (as a creeper),
படரு.
தொத்தவைக்க, to infect, to cause a disease to spread. தொத்திக்கொண்டு திரிய, to stick close to one. தொத்தியேற, to climb a tree without a noose. தொத்துவியாதி, தொத்தி, தொத்துவார் தொத்தி, an infectious disease, தொத்துவான்.