நடு - Nadu
s. the middle,
இடை; 2. the centre,
மத்தி; 3. equity, impartiality,
நீதி; 4. the waist,
இடுப்பு; 5. a law suit,
வழக்கு; 6. the earth,
பூமி. In
comb. before a vowel
நடு is commonly changed into
நட்டு.
நடுக்கட்ட, to sequester property. நடுக்கட்டு, a girdle, an apartment in the middle of a building. நடுக்காரர், arbitrators, umpires, judges. நடுக்குடி, the head family of a tribe or class; 2. a family of middling circumstances, rank etc.; 3. a household in the midst of others, as being safer, than if alone. நடுக்கேட்க, to hear a dispute. நடுக்கொண்ட வீடு, the middle house. நடுச்சாமம், நடுராத்திரி, midnight. நடுச்சுவர், partition wall. நடுச்சொல்ல, நடுப்பேச, to mediate, to decide a case. நடுத்தரம், that which is middling. நடுத்தீர்க்க, தீர்வையிட, to decide a case, to pass judgment. நடுத்தீர்ப்பு, -தீர்வை, judicial judgment; the final judgment. நடுத்தீர்ப்புநாள், the judgment day. நடுநாள், the fourteenth lunar asterism, சித்திரைநாள். நடுநியாயம், equity, impartiality, evenhanded justice. நடுநிலை, mediation, arbitration, strict justice. நடுநிலைமை, middle station in life. நடுப்பகல், midday. நடுப்பார்க்க, to act as an inspector, commissioner, delegate etc., by order of a court. நடுப்பெற, (vulg. நடுப்புற) adv. (inf) in the middle. நடுவண், in the middle; in the midst, amidst. நடுவதுபாதியிலே, in the midst, amidst. நடுவத்தசாமம், நடுவத்தொரு சாமம், midnight. நடுவயது, middle age. நடுவறுக்க, to settle a dispute. நடுவறுத்தான், the name of a plant, boerhavia diffusa, மூக்குரட்டைக் கொடி. நடுவன், நடுக்காரன், a mediator, a judge; 2. Yama, the god of death. நடுவாந்தரத்திலே, in the middle, intermediate. நடுவாந்தரத்திலே வந்தவன், one that came or joined late. நடுவிலவன், நடுவுளவன், the middle one of three brothers. நடுவீடு, the middle or interior of the building. நடுவீதியிலே, in the middle of the street. நடுவெலும்பு, the back bone, spine. நடுவே, நடுவிலே, நடுப்புற, நடுமையத் திலே, in the middle, amidst. அவர்கள் நடுவே, in their midst, between them. நடுவே பேச, to interrupt one who speaks, to speak as a mediator. நடுவே முறிக்க, to object or contradict in speaking; 2. to break in the middle. நட்டாறு, mid-river. நட்டாற்றிலே கைவிட்டான், he forsook me in the critical time, lit. he left me in the middle of the river. நட்டுச்சி, exactly the meridian; the exact zenith.