கடவுள் - Kadavul
s. (
கட, surpassing +
உள்) God, the Supreme Being; 2. sage; 3. guru.
கடவுணதி (கடவுள்+நதி) the river Ganges (of divine origin). கடவுள் வணக்கம், --வாழ்த்து, an invocation to God added at the commencement of a treatise. கடவுட்பணி, (கடவுள் + பணி), service to God; 2. Adisesha, the king of serpents. கடவுட்பள்ளி, a Buddist temple. கடவுளர், the celestials, வானவர்.
வரம் - Varam
s. a boon, a gift, ஈகை; 2. favour, help, அநுக்கிரகம்; 3. excellency, eminence, மேன்மை; 4. one of the nine kinds of treasures, நவ நிதிகளி லொன்று.
வரகவி, a born poet, a poetic genius. வரங்கொடுக்க, to grant a boon or a special gift. வரதம், bestowing a gift, granting a boon. வரதன், a benefactor; 2. an epithet of Siva, Vishnu, and Argha. வரநதி, the river Ganges. வரப்பிரசாதம், divine grace, a spiritual gift. வரம் பெற்றவன், one with a particular gift or talent. வரர், a sages, celestials. வரன், a husband; 2. an epithet of Siva and Brahma; 3. an elder brother, தமையன். வராங்கம், the head; 2. an elegant form; 3. a celestial body, முத்தியர் மெய். வரேந்திரன், one richly gifted. வரோதயன், one born by special favour of a god.
சத்தம் - Satham
சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti. சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம். சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world. தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly. சத்தசுரம், the seven notes of the gamut. சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம். சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி. சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை. சத்தமி, the 7th day after the new or full moon. சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம். சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
From Digital DictionariesMore