துண்டு - Thunndu
s. a piece, a bit, a slice, துணிக்கை; 2. a piece of cloth, துணி; 3. remnant, மிச்சம்; 4. loss in selling goods, நஷ்டம்; 5. a bale of tobacco 4 small and 2 large.
துண்டாட, துண்டாடிப்போட, to cut into pieces, துண்டுபோட. துண்டுப் பலகை, a board, a slab. துண்டுருட்டி, roundness of trunk, a large belly. துண்டுருட்டிக்காளை, a fattened bullock, a steer, குண்டுக்காளை. துண்டு விழ, to be cut in pieces, to suffer loss from small remnants.
ஆசை - Aasai
s. desire, விருப்பம்; 2. ambition, avarice; 3. lust, இச்சை; 4. gold, பொன்; 5. prospect; 6. point of the compass, திக்கு.
ஆசைபதம், allurement. ஆசைபதம் காண்பிக்க, -காட்ட to allure ஆசைகாட்டி மோசம் செய்ய, to allure and then dupe. "பேராசை பெரு நஷ்டம்" (proverb) "Grasp all, lose all." மூவாசை = மண், பெண், பொன் இவைகளின் ஆசை. ஆசைப்பாடு, lust. ஆசைப் பேச்சு, flattery, persuasivespeech. ஆசைமருந்திட, to give a love potion or philter. ஆசைவைக்க, --ப்பட, --கொள்ள, to desire, to long for. அவன் சொத்துக்கு நான் ஆசைப்பட வில்லை, I do not covet his possessions. பொருளாசை, avarice, greed.
காணி - Kaanni
s. hereditary right of possession, உரிமை; 2. land, நிலம்; 3. landed property, காணியாட்சி; 4. an acre of ground containing 24 மனை; 5. the eightieth part of a unit (1/8)
காணிச்சோம்பல் கோடி நஷ்டம், a little indolence results in great loss. காணிபூமி, hereditary land, hereditary right to land, estate, employment etc. காணியாட்சி, (vulg. காணாசி) hereditary right to land, estate, offices etc. காணியாட்சிக்காரன், காணியாளன், காணிக்காரன், un heir, a land-lord. காணியாளன், a hard working agriculturist; 2. a class of Smartha Brahmins; 3. a sub-division of Vellalas. அரைக்காணி, a half cawnie == 1/16. சீதனக்காணி, dowry land. பரம்பரைக்காணி, பிதிரார்ச்சிதக்காணி, ancestral estate. மாகாணி, one-sixteenth 1/16, வீசம். மானியக்காணி, land granted free of rent. முக்காணி, 3/5 of a மாகாணி, = 3/8.
From Digital DictionariesMore