நரன் - naran
s. (pl. நரர், நரர்கள், நராள், நரா ளர், நராட்கள்) a man, a human being, மனிதன்; 2. Arjuna.
நரகரி, நரஹரி, நரசிங்கம், man lion, the fourth incarnation of Vishnu, நரமடங்கல், நரசீவன், a human being. நர (நரசீவ) தயாபரர், the benevolent God as gracious to men. நரதயை, humanity, love towards men. நரதுதி, நரஸ்துதி, adulation of great men. நரதேவன், நரேந்திரன், நரேசன், நரே சுரன், நரபதி, நரபாலன், a king as lord of men. நரத்துவம், human nature. நரநாராயணர், a name of Vishnu, in his incarnation as two sages, நரன், and நாராயணன், afterwards as Arjuna and Vishnu. நரபலி, a human sacrifice. நரமாமிசம், human flesh. நரமாமிசபட்சணம், cannibalism. நரமாமிசபட்சணி, a cannibal. நரமேதம், a human sacrifice. நரவாகனம், a palankeen as supported by men; 2. a man, as the vehicle of Kubera. நரவாகனன், Kubera as borne by a man.
நாரணன் - naranan
நாராயணன், s. Vishnu.