இரு - Iru
adj. (from இரண்டு used before a consonant) two, double, both, இரட் டிப்பான; 2. great, spacious, vast, இருநிலம், spacious earth; 3. black, கரிய.
இருகாலும், both the feet; 2. twice. இருதலைக்கொள்ளி, a brand burning on both ends. இருதலைக்கொள்ளி யெறும்புபோலாக, to be like an ant betwixt two fires. இருதாரைக் கத்தி, a two-edged sword or knife. இருதிணை, (gram), the two classes of nouns. இருதிறத்தார், both parties. இருநிறம், two colours, a double colour. இருநினைவாயிருக்க, to be double-minded, fluctuate, waver. இருநூறு, two hundred. இருபது, twenty. இருபிறப்பாளர், the twice-bora - the Brahmins, Kshatriyas and Vaisyas. இருமடங்கு, two-fold. இருமரபு, the two ancestral lines (paternal and maternal). இருமனம், hesitancy, irresolution, double-dealing. இருமை, duality, the two births, the present and future life. இருவர், two persons. அவர்கள் இருவரும், both of them.
சதம் - Satham
s. a hundred, நூறு; 2. contr. of சதகம்), certainty, durability, perpetuity, நிலைமை; 3. a leaf, இலை; 4. feather, இறகு; 5. end, termination, இறுதி.
இவ்விடம் சதமோ அவ்விடம் சதமோ, Is this or the other world eternal? லோக வாழ்வு சதமல்ல, worldly prosperity is not durable or everlasting. சதகோடி, a hundred crores, சததாரை. சதகோடி சங்கம், a very large assembly, சதாகோடி சங்கம். சதஞ்சீவி, சிரஞ்சீவி, a long-lived person. சதநியுதம், a hundred lakhs a crore. சதபத்திரி, centifolium; 2. the lotus, சதபத்திரம், சததளம். சதமகன், சதக்கிருதன், Indra-the performer of 1 sacrifices. சதமாயிருக்க, to be perpetual, eternal.
ஏழு - Ezhu
s. & adj. seven. In comb. it occurs as ஏழ், or எழு.
எவ்வேழு, seven by seven, seven of or to each. எழுநா, the Fire God (seven-tongued); fire. எழுநிலை மாடம், a mansion seven stories high. எழுநூறு, seven hundred. எழுபது, seventy. எழு பிறப்பு, எழுமை, ஏழ்மை, the seven births. எழுபரியோன், ஏழ்பரியோன், the sun whose chariot is drawn by seven green horses. ஏழத்தனையாக, seven fold. ஏழாந்தேதி, the seventh of the month ஏழாயிரம், seven thousand. ஏழாவது, seventhly. ஏழேழு, seven times seven. பதினேழு, seventeen.
From Digital DictionariesMore