கல்வி - Kalvi
s. learning, erudition, அறிவு; 2. science, arts, வித்தை; 3. practice, பயிற்சி; 4. scientific work, நூல்.
கல்விக்களஞ்சியம், encyclopaedia; 2. a very famous scholar; encyclopaedist. கல்விமான், a learned man. கல்விகற்க, to acquire learning. கல்வியுறைவிடம், seat of learning. கல்வியூரி, a college, school of arts and science, கல்லூரி.
முதுகு - Muthuku
s. the back, பின்புறம்; 2. (Tel.) grossness, coarseness, உரப்பு.
முதுகிலெடுக்க, to carry on the back. முதுகு காட்ட, -கொடுக்க, to show the back, to fly, to be routed in battle. முதுகுநூல், coarse yarn. முதுகெலும்பு, back bone, the spine.
முதல் - Muthal
s. the first, the beginning,
ஆதி; 2. stock in trade, the principal, capital; 3. the main stock of a plant; 4. the first, the Supreme Being; 5. etcetera, and so on, and the rest,
முதலிய; 6. a sign of the 7th case; 7.
(prep.) from.
வட்டியும்முதலும், principal and interest. இதுமுதல், இது முதலாய், இது முதற் கொண்டு, from henceforth. முதல் அங்கேபோ, go first there. முதல்வன், முதல்வன், he who is the first. முதலற்றுப்போக, to lose the principal or capital, to be totally extinguished as a family. முதலாய், even, so much. தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது, there is not even water to be got here. முதலாம் அதிகாரம், the first chapter. முதலாவது, that which is first, first and foremost. முதலான, முதலிய, and other. புலிகள் ஒனாய்கள் முதலான துஷ்ட மிருகங்கள், tigers, wolves and other wild beasts. முதலாளி, a proprietor, a president, a chief, principal. முதலியோர், the remaining persons, and others. முதலே, first, before. முதலோன், முதல்வன், the Deity. முதல் போட, to form or lay out a capital. முதல் முதல், in the very first, at the very outset or beginning, for the first time. முதல்முதல் வாங்க, to take first before the rest. முதல்வர், celestials, தேவர்; 2. sovereigns, kings, அதிபதிகள். முதல்வி, a lady of distinction. முதல் வேதம், the Rig Veda. முதற்காரன், கைமுதற்காரன், a rich man, a capitalist. முதற்பட்சம், the first or best kind or class; 2. for the most part. முதற்பலம், -பலன், the first produce. முதற்பா, a species of verse of different kinds, வெண்பா. முதற்பேறு, the first born; 2. as முதற் பலன். முதற்றரம், the first or best sort; 2. the first time, முதற்றடவை. முதனாள், the first lunar mansion, அச் சுவினி. முதனிலை, (in gram.) the root of a word, பகுதி. முதனூல், a rule of the highest authority; 2. (see under நூல்) an original scientific work regarded as divine, the Vedas. முதனிலைத் தொழிற்பெயர், verbal roots used as verbal nouns. முதன்மை, priority, superiority, supremacy. முதன்மையோர், the chief, the eminent. பறிமுதல், confiscation.
From Digital DictionariesMore