நெருக்கம் - Nerukkam
s. (நெருங்கு) narrowness, closeness, straitness, அடர்வு; 2. pressure, thronging, crowding, நெருங் குகை; 3. distress, trouble, துன்பம்; 4. frequency, perseverance, இடை விடாமை; 5. tyranny, harshness, கொடுமை; 6. nearness as of relationship or friendship, கிட்டினவுறவு; 7. parsimoniousness, கையிறுக்கம்.
நெருக்கத்திலே அகப்பட்டுச்சாக, to be pressed to death in a throng of people. நெருக்கப்பட, to be reduced to straits, to be pressed hard; 2. to be afflicted. நெருக்கப்படுத்த, to oppress, to persecute, to press or urge to prevail upon. நெருக்கமான பந்துக்கள், nearest relations.