எண்ணம் - Ennnnam
s. thought, opinion, நினைவு; 2. purpose, intention, நோக்கம்; 3. conjecture, estimate, மதிப்பு; 4. pride, arrogance, இறுமாப்பு; 5. hope, நம்பிக்கை; 6. regard, respect, கனம்; 7. care, caution, anxiety, விசாரம்; 8. mathematics, கணிதம்.
"பொது எண்ணம்," "Idea" (Plato). எண்ணக்காரன், a soothsayer. எண்ணங் குலைந்தவன், one that is defeated in his expectation, one that has lost his reputation. எண்ணங் கொள்ள, to entertain hope, opinion or view. எண்ணமிட, to think, consider. எண்ணம் பார்க்க, to look for signs. தான் (நான்) என்கிற எண்ணம், presumption, self-conceit.
காடு - Kaadu
s. an uncultivated tract of land covered with forest trees, brushwood etc; jungle, ஆரணியம்; 2. a forest, wood, வனம்; 3. waste land. பாழ் நிலம்; 4. burning place. சுடுகாடு; 5. (in comb.) wild, rough, uncultivated; 6. a nominal termination as in சாக்காடு; நோக்காடு etc; 7. dry land புன்செய்; 8. chaff, straw etc. செத்தை; 9. plenty, abundance மிகுதி.
நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated. காடாரம்பம், land where dry grain is grown. காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water). காடுபடு திரவியம், forest productions. forest produce. காடுவாரி, a rake, one who scrapes up all he can. காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe. காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc. காடுவெட்டி, a wood-cutter. காடோடி, a savage, rustic. காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow. காட்டாடு, a wild sheep. காட்டாள், a clown, a boor. காட்டுக்கீரை, different kinds of greens mixed together. காட்டுக்கோழி, a jungle fowl. காட்டுத்தனம், rusticity, uncultivated manners. காட்டுப்பன்றி, a wild boar. காட்டுப்பிள்ளை, a foundling. காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc. காட்டுப்புத்தி, rusticity, stupidity. காட்டுப்புறா, a wild dove. காட்டுமரம், a wild tree; காட்டுமிருகம், a wild beast. காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage. காட்டெருமுட்டை, dried cow-dung found in fields. காட்டேணி, a bison, காட்டா. காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness. இடுகாடு, burial ground. குடிக்காடு, a village. சுடுகாடு, a place for burning the dead. பருத்திக்காடு, a cotton field. பிணக்காடு, a field covered with corpses. புகைக்காடு, great smoke. புல்லுக்காடு, pasture land, a meadow. புன்செய்க்காடு, high dry land. வயற்காடு, a paddy field. வெள்ளக்காடு, a general flood, inundation. நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.
இலக்கு - Illakku
லக்கு, s. aim, scope, நோக்கம், 2. a mark to shoot at, குறி; 3. distinguishing mark, அடையாளம்; 4. rival in games, எதிரி; 5. favourable opportunity, உசிதசமயம்.
இலக்கறிந்து நடக்க, to go prudently. இலக்கிலே பட்டது, it has hit the mark. இலக்குக் கிட்டாது, it dose not answer the purpose. இலக்குத்தப்பி நடக்க, to live unwisely; to consider not what you are about. இலக்குத் தப்பிப்போயிற்று, the mark is missed. இலக்குப் பார்க்க, to await an opportunity. இலக்குப்பார்க்க, -ப்பிடிக்க, to aim at, to take aim. இலக்குவைக்க, to prefix an aim.
From Digital DictionariesMore