பசி - Pasi
s. hunger, appetite,
பட்டினி.
எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite. பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost. பசியாறிப் போயிற்று, the appetite is satisfied. பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary. சிறுபசி, slight hunger.
போர்வை - Poorvai
s. an upper garment, a cloak, a mantle, துப்பட்டி, 2. the skin, தோல்; 3. v. n. covering, போர்ப்பு.
போர்வை போர்த்துக்கொள்ள, to put on a cloak or mantle.
மறு - Maru
s. a spot, a wart, a mole, மச்சம்; 2. spot, blemish, மாசு; 3. fault, குற்றம்.
நடுக்கடலிலே போனாலும் மறுபடாமல் வரக் கடவாய், though you should go in the midst of the sea, I wish you may return unhurt. மறுப்பட்டிருக்க, to be spotted, to be injured. மறுபட்ட நெய், mixed ghee. மாசுமறுவில்லாத, -வற்ற, pure, spotless.
From Digital DictionariesMore