கொடு - Kodu
VI.
v. t. give, grant, bestow,
ஈ; 2. bring forth,
பெற்றெடு; 3. abuse roundly; 4. an auxiliary as in
சொல் லிக் கொடு.
யானைக்குக் கவளங்கொடு, give balls of rice to the elephant. கொடுக்கல் வாங்கல், dealing, lending and borrowing. அவனுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது, he and I have dealings together; he and I have money dealings with each other. கொடுத்துவிட, to restore. கொடுபாடு, கொடுதலை, giving, paying off. கொடுப்பனை, கொடுப்பினை, giving in marriage, intermarriage, see கொள் வினை. கொடுப்பு, v. n. giving. ஒத்துக் கொடுக்க, to recompense, to compensate. காட்டிக் கொடுக்க, to betray. சாகக் கொடுக்க, to lose by death, as a mother her child etc. சொல்லிக் கொடுக்க, to instruct, to teach. நிறங் கொடுக்க, to tinge, give a colour. பெண் கொடுக்க, to give a girl in marriage. முடித்துக் கொடுக்க, to finish a thing for one. வாங்கிக் கொடுக்க, to buy for another. அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத் தேன், I bought a horse for him. விட்டுக் கொடுக்க, to give up, to relax.
பூ - Poo
s. a flower
புஷ்பம்; 2. film or cataract on the eye; 3. beauty, fairness,
அழகு; 4. sharpness, keenness,
கூர்மை; 5. extense, expanse, dimension,
பொலிவு; 6. flakes of scraped cocoanut,
தேங்காப்பூ; 7. sparks from fire-works; 8. menstruation, catamenia,
பூப்பகம்; 9. the gills of a fish. The 4 kinds of flowers are:- 1.
கொடிப்பூ, flowers of creepers; 2.
கோட்டுப்பூ flowers of branches; 3.
நீர்ப்பூ, water-flowers; 4.
புதற்பூ, flowers of grasses and herbs.
பூக்குஞ்சு, an unfledged young chicken pigeon etc. பூங்கதிர், beautiful brightness. பூங்காவனம், பூங்கா, பூந்தோட்டம், a flower-garden. பூசாத்த, பூச்சாத்த, to put flowers upon an idol. பூச்சட்டை, a garment of fineflowered muslin; 2. ears of corn in blossom. பூச்செண்டு, பூஞ்செண்டு, a nosegay of flowers. பூஞ்சிறகு, down of young birds. பூத்தொடுக்க, to string flowers; 2. to fabricate a false story. பூநொய், fine grits. பூந்தட்டு, a flower-salver. பூப்படர, to spread as a cataract in the eye. பூப்பிஞ்சு, பூம்பிஞ்சு, the young germ of a fruit. பூமழை, பூமாரி, புஷ்பமாரி, flowers strewed down, rain of flowers. பூமாலை, a garland of flowers. பூம்பனை, the male palmyra. பூவரசு, the portia or tulip tree. பூவாணம், a rocket that throws out sparks like flowers. பூவிழ, to form a speck or cataract in the eye.
நீலம் - Neelam
s. blue; 2. indigo, அவுரி; 3. saphire; 4. the blue lotus, கருங்குவளை; 5. poison, விஷம்; 6. the palmyra tree, பனைமரம்; 7. blackness, darkness; 8. wind, காற்று.
நீலகண்டன், Siva (having bluecoloured neck). நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman. நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes. நீலகிரி, the Neilgherry mountains. நீலக்கட்டி, a piece or cake of indigo. நீலக்காரன், -வண்ணான், a dyer in blue. நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly. நீலம்பூச, to strike a blue colour over a thing. நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue. நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn. நீலாகாயம், the azure sky. நீலாஞ்சனம், sulphate of copper, துருசி. நீலாஞ்சனக்கல், sulphuret of antimony. நீலாம்பரன், Balabadra, a form of Siva. நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.
From Digital DictionariesMore