அழி - Azhi
II. v. i. perish, fall to dust, decay, கெடு; 2. fail, தவறு; 3. be defeated, தோல்; 4. swell, increase, பெருகு; 5. sympathise with, பரிவுகூர்; 6. be exhausted, spent, செலவு ஆகு.
அழிகரு, அழிகுட்டி, an abortion. அழிம்பன், a spendthrift, a prodigal, a profligate. அழிம்பாய்ப் போக, அழிம்பாக, to be wasted. அழிம்பு, waste, damage, ruin, injury, act of injustice. சொத்து அழிய, wealth to be wasted. சீர் அழிய, to go out of order, செய லழிய, to become disabled தீரமழிய to lose courage; to be discouraged (உள்ளழிய). அழியாதது, incorruptible thing. அழியாமை, neg. v. n. incorruption. அழிவழக்கு, a very unjust law suit. அழிவு, (v. n.) ruin, decay, downfall. கற்பு அழியாத பெண், a virgin.
அற்பம் - Arpam
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
சகலம் - Sakalam
சகலமும், s. all, the whole, everything எல்லாம், (உம் is also added when declined); 2. a piece, a fragment.
சகலத்திற்கும் நான் இருக்கிறேன், I will see to the whole. சகல, adj. all, every (உம் is generally added to the following substantive). சகல காரியமும், everything. சகலகுண சம்பன்னன், one rich in all good qualities. சகலரும், சகலத்திராளும், சகல (சகல மான) மனுஷரும், all men. சகல மங்கலை, Parvathi. சகல வியாபி, God, the omnipresent. சகலாகம பண்டிதர், one learned in all Agamas, Arunanthi Sivachariar.
From Digital DictionariesMore