இரத்தம் - Ratham
ரத்தம்,
s. blood,
உதிரம்; 2. red, crimon,
சிவப்பு; 3. coral,
பவளம்; 4. lungs, lever, spleen and other viscera,
ஈரல்; 5. saffron,
குங்குமம்; 6. stick lac,
கொம்பரக்கு.
இரத்தக்கலப்பு, --உறவு, relation by blood, consanguinity. இரத்தக்கவிச்சு, --க்கவில், offensive smell of blood. இரத்தக்கழிச்சல், --கிராணி, dysentery. இரத்தக்குழந்தை, a new-born child. இரத்தக் கொழுப்பு, --புஷ்டி. lustiness, stoutness, plethora, pride. இரத்தங்கக்க, இரத்தமாய் வாயிலெடுக்க, to vomit blood. இரத்தங்குத்தி வாங்க, to blood. இரத்த சம்பந்தம், consanguinity. இரத்த சாட்சி, martyrdom, martyr (chr. us.) இரத்தச் சுருட்டை, blood carpersnake, the bite of which causes blood vomiting. இரத்தம் சுண்டிப்போயிற்று, the blood is dried up by hunger, fasting etc. இரத்த நரம்பு, --தாது, vein, blood vessel. இரத்த பாத்தியம், consanguinity, kin. இரத்தபாசம், affection due to blood relationship. இரத்தப்பழி, revenge for bloodshed. இரத்தப்பிரமியம், bloody urine. இரத்தப்பிரவாகம், a flood of blood. இரத்தப்பிரியன், a blood thirsty man. இரத்த மூலம், hemorrhoids. இரத்தம் பீறிடுகிறது, blood gushes out. இரத்தம் வடிகிறது, பாய்கிறது, blood runs down. இரத்தாசயம், the heart. இரத்தாம்பரம், red or purple cloth. இரத்தோற்பலம், the red water-lily.
ஆலை - Aalai
s. a press for pressing sugar cane etc, 2. affliction, உபத்திரவம்.
ஆலைமாலை, trouble, vexation, ஆலை பாய்தல், vascillating as in மனம் ஆலைபாய்கிறது. ஆலையாட்ட, to work a mill, to press sugar cane in a mill.
இலங்கர் - ilangkar
லங்கர், s. (Hind) anchor, நங் கூரம்.
இலங்கர் பாய்கிறது, the anchor, holds fast. இலங்கர் போட, to cast anchor. இலங்கர் தூக்க, to weigh anchor.
From Digital DictionariesMore