சிறை - Sirai
s. a captive, a slave, அடிமை; 2. captivity, சிறைப்பாடு; 3. prison, jail, சிறைச்சாலை; 4. a handsome but loose woman, விபசாரி; 5. fence, wall, மதில்; 6. wing, feather, இறகு; 7. bank, shore, கரை; 8. side of a street, பக்கம்.
சிறைகொண்டு போக, பிடித்துக்கொண்டு போக, to carry one away to captivity, to capture. சிறைக்கூடம், -ச்சாலை -க்களம், prison, jail. சிறைக்கோலம், state of captivity. சிறை நீங்க, to be released, to be set free from captivity. சிறை போனவர்கள், people led into captivity. சிறைப்படுத்த, -யாக்க, to enslave, to take captive, to confine, to ensnare. சிறை மீட்க, to redeem, to ransom. சிறையிருப்பு, captivity, slavery, imprisonment. சிறையெடுக்க, to take by force a woman for wife or concubine; to purchase the freedom of a slave. சிறை வீடு, release from prison. சிறை வைக்க, to keep in prison, to imprison.
சம்பளம் - Sambalam
s. wages, salary, கூலி; 2. the sour lime, எலுமிச்சை.
சம்பளக்காரன், --ஆள், one who serves for monthly wages, a salaried servant. சம்பளத்திலே பிடித்துக்கொள்ள, to make stoppages in the wages. சம்பளத்துக்கமர, to be engaged for monthly wages. சம்பளத்தைக் குறைக்க, to curtail the wages. சம்பளம்பேச, to speak about wages or pay. சம்பளம்போட, to pay the wages, to fix the wages. சம்பளப்பிடித்தம், deduction in wages; withholding payment of salary.
தொண்டை -
s. the throat, மிடறு; 2. a good voice, a singing voice, இனிய குரல்; 3. hooting, bawling, a loud cry, பெருங்குரல்; 4. (Tel.) the trunk of an elephant; 5. the ஆதொண்டை shrub, capparis horrida; 6. the கொவ்வை plant or fruit.
தொண்டை கத்த, -யிட -வைக்க, to bawl out. தொண்டை கம்மியிருக்க, to be hoarse. தொண்டை காட்ட, தொண்டையைக் காட்ட, to speak loud with assumed authority, or as a bold man, உரத் துப்பேச. தொண்டைக் கதிர், that stage in growing corn when it is ready to shoot out ears. தொண்டைக் கனைப்பு, hawking. தொண்டைக்குழி, the pit of the throat. தொண்டை திறத்தல், becoming well opened as the throat of a singer, after singing for some time. தொண்டைப் புகைச்சல், itching or irritation of the throat. தொண்டைப் புற்று, a dangerous tumour in the the throat. தொண்டையில் விக்க, to be choked. தொண்டையை யடைத்துக்கொள்ள, to obstruct the throat. தொண்டையைநெரிக்க, தொண்டையைப் பிடித்துநெரிக்க, to strangle one.
From Digital DictionariesMore