இரத்தினம் -
ரத்தினம், இரத்தினக்கல், s. a precious stone, a jewel, a gem, மாமணி.
இரத்தினகசிதமான, studded with gems. இரத்தன கம்பளம், --கம்பளி, a double woven carpet of different colours. இரத்தின சபை, dancing hall of Nataraja in the shrine of Thiruvalangadu. இரத்தினப்பிரபை, one of the 7 hells, strewn fully with sharp stones. இரத்தின பரிட்சை, the art of examining and choosing gems. இரத்தினமயம், the appearance of precious stones. இரத்தினமயமான, made of or adorned with precious stones. இரத்தினமாலை, a garland or string of precious stones. இரத்தினாகரம், the ocean, கடல், (as the repository of gems). இரத்தினாதிகள், gems, various precious stones. நவரத்தினம், the nine kinds of gems, all sorts of gems.
பிரபை -
s. (பிர) light, splendour, brightness, ஒளி; 2. serenity, தெளிவு; 3. a watershed to supply travellers, பிர பம், பிரபா.
பிரபைகாட்ட, -வீச, to shine, to yield, lustre.
இமம் - imam
s. frigidity, coldness, சீதளம்; 2. frost, snow, உறைந்த மழை; 3. gold, பொன்.
இமகிரி, இமாசலம், இமாலயம், the Himalayas, the abode of snow. இமகிரணன், the moon, (the coldrayed). இமப்பிரபை, one of the seven hells, marked by intense cold, ஓர் நரகம்.
From Digital DictionariesMore