கட்டை - Kattai
s. a block, stump, trunk of a tree, குற்றி; 2. a log of wood, fuel, விறகு; 3. defect, inferiority, deficiency in length or breadth, குறைவு; 4. a dead body, பிரேதம்; 5. (coll.) roughness of the beard after shaving, hairstump; 6. shortness of stature; 7. mile, மைல்; 8. copper core, செப்புக் கட்டை; 9. dam across a river, அணை (local).
துணி முழுக்கட்டையா யிருக்கிறது, the cloth is deficient in length and breath. கட்டைச்சுவர், balustrade, parapet wall. கட்டைநெருப்பு, coal fire. கட்டைப்புத்தி, shallow mind, stupidity. தடைக்கட்டை, முட்டுக்கட்டை, a stumbling block, an obstruction. கட்டையன், (fem. கட்டைச்சி,) a short stout person; a dwarf. கட்டையாய்ப்போக, to become blunt, to grow short. கட்டைவிரல், thump or great toe. அகலக்கட்டையான சீலை, narrow cloth. முகவாய்க் கட்டை, மோவாய்க்கட்டை, முகக்கட்டை, மோக்கட்டை, the chin.
சீவம் - civam
s. life, the sentient soul, சீவன்.
சீவகாருண்ணியம், benevolence, humanity. சீவகாலம், -நாள் -தசை, life-time. சீவசெந்துக்கள், -ப்பிராணிகள், living creatures. சீவச்சவம், -ப்பிரேதம், a weak person lit. a living corpse. சீவதாது, life pulse. சீவத்துவம், vitality. சீவநாடி, the vital artery. சீவநாயகன், God, the author of life. சீவந்தன், a living person. சீவராசிகள், all that live. சீவவிருட்சம், the tree of life. சீவாத்துமம், a living soul. சீவோர்ப்பத்தி, the first beginning of life in the womb. சீவலயம், death.
சீனம் - cinam
சீனா, s. China; 2. the chinese language.
சீனகர், the Chinese. சீனக்கண்ணாடி, a kind of lookingglass, as from China. சீனக்கிழங்கு, rheum emodi, செடிவகை. சீனப்பூ, the name of a flower, lagerstroemia indica. சீனவெடி, சீனிவெடி; Chinese crackers in fire works. சீனவேலை, சீனத்துவேலை, any curious Chinese work. சீனன், சீனாக்காரன், a China man, Chinese. சீனாப்பிரேதம், a pale thin emaciated person.
From Digital Dictionaries