தங்கம் - Thangam
s. fine gold, pure gold, உயர்ந்த பொன்.
தங்கக்காசு, a gold coin. தங்கக்காறு, gold in bars. தங்கத்தகடு, thin gold plate. தங்கத்தாம்பாளம், a plate of gold. தங்கபஸ்பம், s. medicinal powder of gold-called ashes of gold. தங்கப்பாளம், a flat piece or ingot of gold. தங்கமலாம், -முலாம் -ப்பூச்சு, gilt, gilding. தங்கமான வார்த்தை (பிள்ளை, நிலம், etc.) an excellent dear word (child. field etc.) தங்கமிழைக்க இட, அழுத்த, to set with gold. தங்கம் பூச, to gild. தங்க ரேக்கு, gold leaf, gold foil. தங்கவேலை, setting precious stones etc. in pure gold. புடமிட்ட தங்கம், refined gold.
பொன் - Pon
s. gold
சுவர்ணம்; 2. Lakshmi; 3. beauty,
அழகு; 4. metal in general (as in
கரும்பொன், iron etc.); 5. a small gold coin; 6. lustre, brilliance,
பிரகாசம்; 7. the sun,
சூரியன். In combination
ன் is changed into
ற் before
க,
ச,
த,
ப).
போ போ , a poetic expletive, அசைநிலை.
பொன்விளையும் பூமி, a fertile soil, soil yielding gold. பொற்கசை, பொற்கம்பி, பொற்சரடு, goldwire. பொற்கட்டி, an ingot or lump of gold. பொற்கண்டை, -கெண்டை, -சரிகை, gold fringe, threads of gold. பொற்கலசம், (christ. us.) a golden vial. பொற்கலம், -கலன், a gold salver; 2. a gold ornament. பொற்காசு, a gold coin. பொற்சங்கிலி, a gold chain. பொற்சீந்தில், a sweetish kind of the menispermum cordifolium, நற் சீந்தில். பொற்சுண்ணம், gold-dust strewn on persons upon grand occasions, பொற்றூள். பொற்பணிதி, பொன்னகை, பொன்னாபர ணம், gold jewels. பொற்பாளம், bars of gold, bullion. பொற்பூச்சுப்பூச, to gild, to gild over. பொற்றகடு, a gold plate. பொற்றட்டான், பொன்செய் கொல்லன், a goldsmith. பொற்றாமரை, the golden lotus of Swerga; 2. a sacred tank at the temple in Madura. பொற்றொடி, a gold bracelet; 2. a woman wearing a gold bracelet. பொன்மணல், sand containing gold. பொன்மயம், golden lustre. பொன்மலை, Maha Meru, the golden mountain; 2. the golden rock in Trichinopoly. பொன்முளை, a stamp on gold coin. பொன்மை, the colour of gold. பொன்வகை, the four species of gold viz. ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம். பொன்வண்டு, a gold-coloured bettle, cantharides. பொன்வாய்ப்புள், a kind of bird-a species of king-fisher, சிச்சிலிக் குருவி. பொன்வித்து, sand containing lead, நாகமணல். பொன்விலை, a very high price.
துவாலை -
s. flow of blood, lochial discharges; 2. anointing the whole body, பூச்சு; 3. (vulg. துவளை) liniment, தைலம்; 4. (Eng.) a towel.
துவாலையிட, to rub a liniment on the whole body. துவாலையிறைக்க, to flow excessively (as in the menses etc.).
From Digital DictionariesMore