ஆனந்தம் - Aanantham
s. great joy, bliss, happiness, பேரின்பம்; 2. death, மரணம், 3. fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று.
ஆனந்தகரம், that which delights. ஆனந்த சந்தோஷம், -க்களிப்பு, exceeding, great joy. ஆனந்த பரவசம், ecstasy of joy especially in divine things. ஆனந்தபாஷ்பம், tears of joy. ஆனந்தன், God, the supremely Happy One. மோட்சானந்தம், joy celestial. ஆனந்த தாண்டவம், ecstatic dance of Siva, ஆனந்த நிருத்தம், -நர்த்தனம். ஆனந்த மயம், that which is full of bliss; innermost sheath of the soul. ஆனந்த மூலி, opium as it produces joy by intoxication.
இன்பம் - Inbam
இன்பு, s. delight, happiness, அகமகிழ்ச்சி; 2. deliciousness, இனிமை, 3. sexual love, காமம்; 4. marriage, விவாகம்.
இன்பன், husband. இன்ப துன்பம், joys and sorrows. இன்புற, to experience delight. (v. n. இன்புறல்). காதுக்கு இன்பம், pleasant to the ear. சிற்றின்பம், evanescent pleasure, sensuality, lewdness. சிற்றின்பப்பாட்டு, a bawdy song. பேரின்பம், heavenly bliss.