நிமித்தம் -
நிமித்தியம், s. a sign, a mark, அடையாளம்; 2. an omen, an augury, சகுனம்; 3. cause, motive, முகாந்தரம்; 4. efficient cause, காரணம்; 5. for the sake of, on acccount of, பொருட்டு.
இதினிமித்தம், for this reason, therefore. அடித்ததினிமித்தம் or அடித்தநிமித்தம், as he had beaten. நிமித்தகாரணம், the efficient cause. நிமித்தக்காரர், diviners, augurs from omens, prognosticators. நிமித்தத்துவம், instrumentality, causality. நிமித்தம்பார்க்க, to consult omens, to observe superstitious signs. துர்நிமித்தம், a bad omen. நன்னிமித்தம், a good omen.
பொருட்டு -
s. & particle (பொருள்) cause, காரணம்; 2. a thing of importance; 3. on account of, for the sake of, நிமித்தம்; 4. in order to, படிக்கு.
அவன் பொருட்டு, for his sake. அது ஒரு பொருட்டன்று, it is a matter of no consequence. ஒரு பொருட்டாய்ப் பார்க்க (எண்ண), to esteem a thing worth caring for. அவனை ரட்சிக்கும் பொருட்டாக, in order to save him.