விழி - Vizhi
(முழி, மிழி), s. the eye.
விழியன், பெருவிழியன், one who has protuberant eyes. கண்விழி, கரு-, the eyeball, கண்மணி. கறுப்புவிழி, the black of the eye. சிறு விழியன், one who has small pink eyes. வெள்ளை விழி, the white of the eye.
துளசி - Thulasi
s. Tulasi, the holy basil-herb, ocymum sanctum.
துளசித் தீர்த்தம், Tulasi leaves and consecrated water taken in making oath in court. துளசிமணி, beads made of Tulasi root. துளசிமாலை, a necklace of Tulasi leaves or beads.
நீலம் - Neelam
s. blue; 2. indigo, அவுரி; 3. saphire; 4. the blue lotus, கருங்குவளை; 5. poison, விஷம்; 6. the palmyra tree, பனைமரம்; 7. blackness, darkness; 8. wind, காற்று.
நீலகண்டன், Siva (having bluecoloured neck). நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman. நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes. நீலகிரி, the Neilgherry mountains. நீலக்கட்டி, a piece or cake of indigo. நீலக்காரன், -வண்ணான், a dyer in blue. நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly. நீலம்பூச, to strike a blue colour over a thing. நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue. நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn. நீலாகாயம், the azure sky. நீலாஞ்சனம், sulphate of copper, துருசி. நீலாஞ்சனக்கல், sulphuret of antimony. நீலாம்பரன், Balabadra, a form of Siva. நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.
From Digital DictionariesMore