இல் - Il
s. place இடம்; 2. house, வீடு; 3. domestic life, இல்லறம்; 4. a wife, மனைவி; 5. zodiacal sign, இராசி; 6. a sign of the 7th case, as in வீட்டி லிருந்தாள், she was at home; 7. a sign of the 5th case as in அரசரிற் பெரியர் அந்தணர்; the Brahman caste is superior to the royal; 8. clearing-nut தேத்தாங்கொட்டை.
இல்லடைக்கலம், the act of depositing or taking refuge in a house. இல்லவன், இல்லான், (fem.) இல்லவள், இல்லாள், the husband, the head of the family. இல்லறம், domestic life, duties of a household, domestic virtues. இல்லிடம், dwelling. இல்லக்கிழத்தி, wife. இல்லொழுக்கம், the practice of the household duties. இல்வாழ்க்கை, --வாழ்வு, domestic life. இல்வாழ்வான், a family man. இற்பிறப்பு, noble birth. இற்புலி, a cat.
வாழ்க்கை - Vaazhkkai
s. riches, felicity, செல்வம்; 2. living prosperously, வாழ்வு; 3. a wife, மனைவி; 4. a borough, a small town, ஊர்; 5. a tawn in a cultivated district, மருதநிலத்தூர்.
வாழ்க்கைத் துணை, a wife. வாழ்க்கைப்பட, to get married. வாழ்க்கைப்பட்ட பெண், a married girl. இல்வாழ்க்கை, domestic life.
குடும்பம் - Kudumbam
s. family, ஒருகுடிசையிலுள் ளோர்; 2. relations, இனத்தார்; 3. race, house, குடி; 4. wife, மனைவி.
குடும்பக்கோடாலி, a prodigal (by whom the whole family is disgraced and ruined). குடும்பங்கலைக்க, to destroy the peace of a family. குடும்ப சவரக்ஷணை, -சம்ரக்ஷணை, the maintenance of a family. குடும்பப்பாரம் தாங்க, -சுமக்க, to support a family. குடும்பப் பிரதிஷ்டைபண்ண, to found or establish a family. குடும்பமாயிருக்கிறவன், one who has a large family. குடும்பி, குடும்பஸ்தன், குடும்பன், (fem. குடும்பினி, குடும்பஸ்தி), the father of a large family.
From Digital DictionariesMore