காற்று - Kaatru
s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம்.
காற்றடிக்கிறது, the wind blows. காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind. காற்றாடி, a paper kite; 2. a changeable person. காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen. காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards. காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm. காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind. காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon. காற்றுத் திரும்புகிறது, the wind shifts. காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind. காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire. காற்றோட்டம், ventilation. இளங்காற்று, a gentle breeze. ஊதல்காற்று, பனிக்--, a cold wind. சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind. தென்றல், தென்காற்று, the south wind. நச்சுக்காற்று, noxious air. பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind. மேற்காற்று, the west wind. வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
மறை - Marai
s. a spot, blemish,
கறை; 2. secrecy, a secret,
இரகசியம்; 3. refuge, shelter,
அடைக்கலம்; 4. word,
சொல்; 5. spiral winding of a screw; 6. the second ploughing; 7. the sacred writing, the Vedas; 8. a shield,
கேட கம்.
மறைக்கெடியோன், Brahma; 2. Dronacharya, as the Veda-bannered; 3. a Brahmin, பார்ப்பான். மறைசை, a name of வேதாரணியம். மறைபுகல், v. n. taking refuge. மறைப்பொருள், the deep treasures of the Vedas. மறை மறையாயிருக்க, -விழுந்திருக்க, to be coloured black and white. மறைமொழி, incantation, the Vedas. மறைவயர், யோர், the Brahmins; 2. learned sages. மறையாணி, a screw. எதிர்மறை, negative.
ஒளி - Oli
s. light, splendour,
பிரகாசம்; 2. hiding place,
மறைவிடம்; 3. screen for the fowler to catch birds; 4. fame.
கியாதி; 5. a lamp,
விளக்கு; 6.
the 18th lunar asterism, கேட்டை; 7. distinction, excellence, மேன்மை; 8. sun-shine, வெய்யல்; 9. lightning, மின்; 1. fire, நெருப்பு; 11. a star, நட்சத்திரம்.
ஒளிசித்திரப் படம், magic lantern slides. ஒளிபடர, to spread as light. ஒளிமங்க, --மழுங்க, to grow dim. ஒளிவீச, --விட, to shine to emit light; to cast rays. ஒளிவைத்துப் பிடிக்க, to catch the game by setting a snare.
From Digital DictionariesMore