மாயம் -
s. vanity, emptiness, unreality, illusion, மாயை; 2. hypocrisy, simulation, மாய்மாலம்; 3. fraud, trick, வஞ் சனை; 4. wickedness, evil act, தீமை; 5. incantation, magic, தந்திரம்; 6. blackness, கறுப்பு.
மாயக்காரன், a hypocrite, a juggler. மாயக்கள்ளி, a deceiving and bewitching woman. மாயசாலம், dissimulation, deceit. மாயமாய்ப்போக, to vanish away mysteriously. மாயமாலம், a deceitful devil. மாயம்பண்ண, -செய்ய, -அடிக்க, to dissemble. மாயரூபம், a spectre, an apparition, a phantom. மாயவித்தை, மாயாவினோதம், magical tricks sleight of hand. மாயாவி, a conjuror.
சித்து -
s. intellect, that which thinks, spirit (opp. to சடம் or அசித்து, matter); 2. wisdom, அறிவு, 3. legerdemain, sleight of hand, optical illusions, மாயவித்தை; 4. சித்தி, supernatural power; 5. sacrifice, யாகம்; 6. success, வெற்றி; 7. a masquerade dance.
சித்தசித்து, spirit and matter. சித்துநீர், mercury. சித்து விளையாட, to juggle, to play tricks.