வீடு - Viidu
s. a house,
இருப்பிடம்; 2. emancipation from births, heavenly felicity,
மோட்சம்; 3. constellation or a house of a planet; 4. leaving,
விடல்.
வீடுகட்ட, to build a house. வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family. வீட்டாள், a servant in the house. வீட்டிறப்பு, the eaves of a house. வீட்டுக்காரி, (masc. வீட்டுக்காரன்), the female owner of a house; 2. the wife. வீட்டுக்குடையவன், வீட்டெசமான், the owner of the house, the head of the family. வீட்டுக்குத் தூரம், -விலக்கம், removal outside of the house (as of a menstruous woman). வீட்டுச் சீட்டு, the deeds and bills of sale of a house. வீட்டுப்பெண், a daughter-in-law. வீட்டுவாடகை, rent of a house. வீட்டு வீட்டுக்கு, வீட்டுக்கு வீடு, வீடு வீடாய், from house to house, to each house. வீட்டே (வீட்டுக்குப்) போ, go home. கிரகங்களின் வீடு, the region of the planets.
வரம் - Varam
s. a boon, a gift, ஈகை; 2. favour, help, அநுக்கிரகம்; 3. excellency, eminence, மேன்மை; 4. one of the nine kinds of treasures, நவ நிதிகளி லொன்று.
வரகவி, a born poet, a poetic genius. வரங்கொடுக்க, to grant a boon or a special gift. வரதம், bestowing a gift, granting a boon. வரதன், a benefactor; 2. an epithet of Siva, Vishnu, and Argha. வரநதி, the river Ganges. வரப்பிரசாதம், divine grace, a spiritual gift. வரம் பெற்றவன், one with a particular gift or talent. வரர், a sages, celestials. வரன், a husband; 2. an epithet of Siva and Brahma; 3. an elder brother, தமையன். வராங்கம், the head; 2. an elegant form; 3. a celestial body, முத்தியர் மெய். வரேந்திரன், one richly gifted. வரோதயன், one born by special favour of a god.
முத்திரை - Muththirai
s. seal, signet, seal-ring, இலாஞ்சனை; 2. stamp, impress, private mark, அடையாளம்; 3. badge of a soldier or peon.
கன்னி முத்திரை, the hymen. முத்திரைக்கோல், -அச்சு, a stamp, a sealing stick. முத்திரைதானம் பெற, to be branded on the shoulders with the mark of a chank and wheel in honour of Vishnu. முத்திரை போட, -குத்த, to seal. முத்திரைப் பலகை, a wooden stamp for sealing a heap of corn. முத்திரை முடிச்சு, -முடிப்பு, a sealed packet. முத்திரை மோதிரம், a seal-ring.
From Digital DictionariesMore