சாதனை - Saathanai
s. steady and persevering practice, விடாமுயற்சி; 2. obstinately affirming or denying, persistence in an opinion, வற்புறுத்தல்; 3. skill in performing different arts as dancing, playing, fencing etc.; 4. misrepresentation, dissimulation, falsehood, பொய்.
ஒரே சாதனையாய்ச் சாதிக்கிறான், he obstinately persists in saying so. சாதனைக்கள்ளன், an obstinate character. சாதனைக்காரன், one that practises any art; 2. same as சாதனைக்கள்ளன். சாதனைக்காரன், --சாதனை செய்ய, --பண்ண, to practise or exercise a dexterous art; 2. to affirm or deny obstinately, சாதிக்க. கற்பசாதனை, strengthening the body by the use of drugs.
உற்சாகம் - Ursaakam
vulg. உச்சாயம், s. perseverance, effort, முயற்சி; 2. cheerful exertion, promptitude, ஊக்கம்; 3. spontaneous willingness, மனப்பூர ணம்; 4. extreme joy, சந்தோஷம்.
உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான், he is transported with joy. உற்சாகப்பங்கம், உற்சாகப்பிழை, unwillingness. உற்சாகப்படுத்த, உற்சாகங்கொடுக்க, to encourage, excite. உற்சாகமாய், மனோற்சாகமாய், adv. voluntarily, willingly, freely. உற்சாக மருந்து, cheering stimulent.
கூட்டம் - Kuuttam
s. (கூடு) junction, union, கூடுகை; 2. a meeting, crowd, assembly, confederation, திரள்; 3. kindred, relation, caste, tribe, இனம்; 4. copulation, புணர்ச்சி; 5. oil cake, பிண் ணாக்கு; 6. battle, war, fighting, போர்.
கூட்டக்கட்டு, ties of blood. கூட்டங்கூட, to assemble, to meet together, to gather together. கூட்டங்கூட்ட, to bring together, to assemble, to convene. கூட்டங் கூட்டமாய், in great numbers, in crowds. கூட்டத்தார், members of the same family, society or association. கூட்டம்போட, to crowd together. கூட்டர், friends, companions; members of the same tribe. அன்பர்களின் கூட்டம், (christ.), society of friends; Quakers. கூட்டமாய்ச் செய்யப்படும் முயற்சி, organized effort.
From Digital DictionariesMore