வியாதி - Viyaathi
s. sickness, disease, நோய்.
யாதி முற்றினால் வியாதி, too much thought brings disease. வியாதிக்காரன், வியாதிஸ்தன், வியாதி யஸ்தன், a sick man. வியாதி பரிட்சை, அஷ்டதானப் பரிட்சை, the eight places of symptoms:- pulse, face, stool, urine, eyes, tongue, body and the voice. வியாதியாய் விழ, to fall sick.
இழை - Izhai
s. thread, yarn, நூல்; 2. jewel, ஆபரணம்; 3. (in comp.) a lady bedecked with jewels as நேரிழை, முற் றிழை; 4. string tied round the wrist for a vow, கையிற் கட்டும் காப்பு; 5. one of the 8 ornaments of style.
இழைகுளிர்த்தி, firmness of texture. இழைநெருக்கம், being thickly woven, close-threadedness. இழைவாங்கி, -ஊசி, a darning needle. இழைபிட, -போட, -யோட்ட, to darn, to fine-draw. இழையோட, to measure with a line, to wind thread. நாலிழை நெசவு, cloth of four-twisted threads. மூன்றிழைத் தையல், stitching of three-twisted threads. மயிரிழை, hair-breadth.
பாதி - Paathi
s. half, moiety, அரை; 2. a part, பங்கு; 3. a husband, கணவன்; 4. a master, a lord, தலைவன்.
பாதி வேலையாயிற்று, the work is half done. பாதிக்காரன், an equal partner. பாதிப் பேச்சு, broken speech, the midst of a dispute. பாதியாய்ப் பிரிக்க, -பங்கிட, to halve, to divide into two equal parts. பாதி யிராத்திரி, பாதி ராத்திரி, பாதிச் சாமம், midnight. பிற்பாதி, the latter half. முற்பாதி, the former half. பாதிக்க, (used in poetry) to halve, to divide in halves.
From Digital DictionariesMore