வயிறு - Vayiru
s. the belly, abdomen, stomach, உதரம்.
எனக்கு வயிற்றை எரிகிறது, I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry. வயிறு கழிய, வயிற்றாலேபோக, to have looseness or diarrhoea, to purge. வயிறு காய, to hunger, to be hungry. வயிறு குளிர, to be satisfied, refreshed by food. வயிறுதாரி, வயிற்றுமாரி, a glutton, a devourer. வயிறுபொரும, வயிறூத, the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating. வயிறு வளர்க்க, to maintain oneself. வயிறெரிய, to feel heat in the stomach; to be hungry; to be envious; to yearn in compassion. வயிற்றுக் கனப்பு, constipation. வயிற்றுக் காய்ச்சல், hunger. வயிற்றுப் பிழைப்பு, livelihood. வயிற்றுப் போக்கு, looseness of the bowels. வயிற்றுவலி, -நோய், stomach-ache. வயிற்றெரிச்சல், வயிற்றெரிவு, v. n. of வயிறெரிய. அடிவயிறு, the lower part of the abdomen. மேல்வயிறு, the upper part or region of the stomach.
திறமை - Thiramai
s. capacity, ability, சமர்த்து; 2. strength, வலி; courage, manliness, தைரியம்; 4. excellence, மேன்மை; 5. wealth, ஐசுவரியம்.
திறமையுள்ளவன், a strong man, a wealthy man.
கூர்மை - Kuurmai
s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.
From Digital DictionariesMore