காற்று - Kaatru
			s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம்.
			
								காற்றடிக்கிறது, the wind blows.				காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind.				காற்றாடி, a paper kite; 2. a changeable person.				காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen.				காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards.				காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm.				காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind.				காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon.				காற்றுத் திரும்புகிறது, the wind shifts.				காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind.				காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire.				காற்றோட்டம், ventilation.				இளங்காற்று, a gentle breeze.				ஊதல்காற்று, பனிக்--, a cold wind.				சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind.				தென்றல், தென்காற்று, the south wind.				நச்சுக்காற்று, noxious air.				பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind.				மேற்காற்று, the west wind.				வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
						
			சாராயம் - Saaraayam
			s. arrack, distilled liquor, brandy, அரக்கு.
			
								சாராயக்கடை, an arrack shop.				சாராயக்காரன், a distiller of arrack; an arrack seller.				சாராயக்குத்தகை, arrack-rent.				சாராயம்வடிக்க, --காய்ச்ச, to distil arrack.				சாராயவெறி, intoxication.				அரிசிச்சாராயம், arrack from rice and jaggery.				கள்ளுச்சாராயம், arrack from toddy.				பட்டைச்சாராயம், arrack from the astringent bark of வேலமரம்.
						
			இறங்கு - Irangu
			III. v. i. descend, come down, flow down, drop down, தாழச்செல்லு; 2. disembark, கறையிறங்கு; 3. alight from a horse; 4. take up a lodging, halt, தங்கு; 5. abate, become reduced, தாழ்வடை; 6. fall from a higher state, நிலைகுலை.
			
								இறக்கம், v. n. descending, a declivity; a descent; a ford.				மழை இறக்கம், a shower of rain.				நோயாளிக்குச் சோற்றிறக்கமில்லை, the patient has no appetite, he is unable to swallow food.				இறங்கல், v. n. descending, dismounting, getting down a tree etc.				இறங்காத்துறை, a place not convenient for landing; an improper marriage etc.				இறங்குதுறை, a ford, a place of landing.				இறங்குபொழுது, time of sun-set.				ஏற இறங்கப்பார்த்தல், looking at one from foot to head and vice versa in anger and reproof.
			From Digital DictionariesMore