வறுமை - Varumai
s. poverty, தரித்திரம்; 2. emptiness, வெறுமை.
வறிது, that which is insignificant. வறிய, வறு, adj. empty, small, mean. வறியவன், a destitute man. வறுங்காலம், time of scarcity. வறுங்கோடை, a very dry season. வறுநகை, a smile. வறுநிலம், waste ground. வறுமொழி, a useless word.
வினா - Vinaa
s. a question, கேள்வி. (opp. to விடை, an answer); 2. attention, remembrance, ஞாபகம்; 3. sagacity, prudence, புத்தி.
அது எனக்கு வினாவாயிருக்கவில்லை, I cannot remember it. வினாக்கொள்ள, -ப்பற்ற, -ப் பாய, -வாக, to remember. வினாச்சொல்ல, to remind one of a thing. வினாப்பெயர், an interrogative pronoun. வினாவறி பருவம், age of discretion. வினாவறிய, to begin to understand, as children. வினாவாய்க் கேட்க, to hear attentively. வினாவிடை, questions and answers. வினாவுள்ளவன், a judicious person.
ஆற்று -
III.
v. t. cool, refresh,
குளிரச் செய்; 2. appease, comfort,
தணி; 3. slacken, loosen what is too tight,
தளர்த்து; 4. act,
செய்; 5. carry, bear,
தாங்கு, v. i. be possible as in ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி); 2. be sufficient; 3. be equal to, compare with, உவமையாகு.
ஆற்றப்படாத உபத்திரவம், an inconsolable distress. இங்கேயிருக்க எனக்கு ஆற்றாது, staying here will give me no satisfaction. ஆற்றொணாத்துயர், unbearable distress. ஆற்ற, adv. see above. ஆற்றல், v. n. cooling, consoling, enduring. ஆற்றாமை, ஆற்றாத்தனம், inability to bear pain etc. insatiableness; impatience, envy. ஆற்றித் தேற்ற, to comfort, console. பசியாற்ற, to appease hunger. மயிராற்ற, to dry the hair after bathing. முறுக்கையாற்ற, to slacken or loosen a twist. ஆற்றார், enemies: the poor, the afflicted, வறியர்.
From Digital DictionariesMore