வியாதி - Viyaathi
s. sickness, disease, நோய்.
யாதி முற்றினால் வியாதி, too much thought brings disease. வியாதிக்காரன், வியாதிஸ்தன், வியாதி யஸ்தன், a sick man. வியாதி பரிட்சை, அஷ்டதானப் பரிட்சை, the eight places of symptoms:- pulse, face, stool, urine, eyes, tongue, body and the voice. வியாதியாய் விழ, to fall sick.
நோய் - Nooy
s. sickness, disease, வியாதி; 2. suffering, trouble, துன்பம்; 3. pain, smart, நோ.
நோயும் பாயுமாய்க் கிடக்க, to be bedridden. நோயாளி, a sick person, a patient. நோய்கொள்ள, -பிடிக்க, to fall sick, to become diseased. நோய் விழ, to affected as a patient etc.
கெண்டை - Kenndai
s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம்.
சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp. கெண்டைக்கட்டி, enlargement of the spleen. கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg. கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace. கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe. கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints. கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease. சூரத்துக்கெண்டை, lace from Surat.
From Digital DictionariesMore