வில் - Vil
s. a bow,
தனுசு; 2. a spring of a clock etc; 3. the 19th lunar mansion
மூலநாள்; 4. light,
ஒளி; 5. the
banner of the Sera kings, சேரன் கொடி.
வில்லம்பு, the arrow discharged from a bow. வில்லவன், விற்சேரன், an epithet of the Sera kings, the device on whose banner was a bow, சேரன். வில்லாண்மை, dexterity with the bow, archery. வில்லார், வில்லியர், hunters. வில்லாளன், வில்லாளி, விற்காரன், an archer. வில்லெய்ய, வில்போட, to shoot with a bow. வில்லேருழவர், warriors, படைவீரர். வில்வாங்க, -ஏறிட, to bend a bow. வில்வித்தை, archery. விற்காரன், an archer. விற்கால், a bow-leg. வின்னாண், a bow-string.
களவு - Kalavu
s. theft, திருட்டு; 2. deceit, treachery, வஞ்சனை.
கையுங்களவுமாய்ப் பிடிக்க, to catch one red-handed. களவன், களவாணி, களவாளி, a thief. களவுபோனது, things stolen away. களவொழுக்கம், illicit intercourse; களவிற்கூட்டம், களவுப்புணர்ச்சி. களவாடப்பட்டுவர, to be kidnapped.
சில்லறை - Sillarai
s. (Tel.) a little, fewness, trifles, small matters, அற்பமானவை; 2. sundries distributed in diverse places, quantities etc. சிதறியவை; 3. fractional quantities, சில்வானம்; 4. change, small money; 5. trouble, disturbance, உபத்திரவம்; 6. a petty annoying business.
சில்லறைக் கடன், small petty debts. சில்லறைக் கடை, retail shop or bazaar. சில்லறைக் கணக்கு, sundry accounts. சில்லறைக் காசு, petty bribe; 2. small money, change. சில்லறைக் காரியங்கள், trifles. சில்லறைச் செலவு, expenses in small items. சில்லறைப் புத்தி, shallow wit; 2. adultery, விபசாரம்; 3. mean-mindedness. சில்லறை யாட்கள், unimportant persons, troublesome people. சில்லறையிலே விற்க, to ratail. கள்ளர் சில்லறையில்லை, there is no disturbance from thieves. காதுச் சில்லறை, small ornaments for the ears of women.
From Digital DictionariesMore