தவிர் - Thavir
தவிரு, II. v. i. & t. abstain from, நீங்கு; 2. shun, avoid, விலகு; 3. be excluded, avoided, omitted, கழி; 4. cease, ஒழி; 5. be hindered, frustrated. தடைபடு; 6. subside, abate, தணி; 7. desist, forbear, discontinue, விடு. தவிர, adv. (inf.) except, besides.
அவள் தவிர, அவனைத் தவிர, besides him, without him, him excepted. அது (அதைத்) தவிர, except that. அதுவுந் தவிர; besides that, moreover. தவிர்வு, v. n. abstaining from, avoiding; 2. exception, omission; 3. relinquishment; 4. cessation, ஒழி தல்; 5. excluding, அகற்றுதல்.
திரும்பு - Thirumbu
III. v. i. turn, move round, turn about, வளை; 2. return, மீளு; 3. change, மாறு; 4. be changed, converted, குணப்படு; 5. be averted, விலகு; 6. retrogade, பின்னிடு.
காற்று திரும்புகிறது, the wind turns, changes, veers. விஷந் திரும்பிற்று, the poison is checked or counteracted. வியாதி திரும்புமுகமாயிருக்கிறது, the disease has taken a favourable turn. திரும்ப, adv. (inf.) again. திரும்பத் திரும்ப, again and again. திரும்பவும், again, furthermore, morerover. திரும்பவும் என்ன, what more, what else? திரும்பிப் பார்க்க, to look back. திரும்பிப் போக, to go back again. திரும்பி வர, to return.
நழுவு -
III. v. i. slip out of the hand, fall off, slip off, (as a garment) வழுவு; 2. steal or skulk away, விலகு; 3. evade, தப்பித்துக்கொள்.
நழுவல், v. n. slipping, evading. நழுவலான பேச்சு, shuffling talk. நழுவிப்போகப் பார்க்க, to try to skulk away or escape.
From Digital DictionariesMore