நீக்கு - Niikku
s. separation, removal, விலக்கு; 2. cleft, chink, பிளப்பு; 3. remainder, balance, மீதி.
நீக்குப்போக்கு, opening gap, பிளப்பு; 2. means, pecuniary ability, வழி வகை; 6. management, contrivance, உபாயம். நீக்குப்போக்கில்லாதவன், one destitute of pecuniary means etc. நீக்குப்போக்கு அறியாதவன், one ignorant of etiquette; a novice or one unacquainted with business.
தாங்கு - Thaangu
III. v. t. bear up, support, assist, தாபரி; 2. ward off, keep off, விலக்கு; 3. bear, suffer, endure, tolerate, சகி; 4. carry, சும; 5. protect, guard, கா; 6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து; 7. suffice.
எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it. அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him. என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much. காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind. தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness. தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking. பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking. தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly. தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.
மது - Madhu
s. sweetness, இனிமை; 2. any sweet and intoxicating liquor, spirits, wine, toddy, கள்; 3. honey, தேன்; 4. spring, வசந்தகாலம்; 5. the name of Daitya slain by Vishnu.
மதுகண்டம், the koil, குயில். மதுகம், sweetness; 2. liquorice; 3. the long-leaved bassia longifolia, இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி. மதுகரம், a bee; 2. honey of flowers. மதுகாரி, a bee, தேனீ. மதுகோசம், a bee-hive. மதுக்கெண்டை, a kind of fish. மதுசகன், Kama as the companion of spring. மதுசூதனன், Vishnu, the destroyer of the demon மது. மதுதிருணம், sugar-cane, கரும்பு. மதுதூதம், the mango tree -- mangifera Indica. மதுதூலி, molasses. மதுபதி, -பலி, Kali the goddess. மதுபம், a bee, தேனீ (as sucking honey). மதுபானம், any sweet and intoxicating drink. மதுமத்தை, the ஊமத்தை plant. மதுமூலம், sweet potato, சர்க்கரை வள்ளி. மதுமாமிசம் தின்ன, to live luxuriously on toddy and flesh. மதுரசம், sweet juice, juice of the moon-plant, asclepias acida; 2. sweetress of flavour or in speech; 3. the vine, முந்திரிகை. மதுவிலக்கு, abstinence from intoxicating drink. பூரணமதுவிலக்கு, total abstinence from drink.
From Digital DictionariesMore