குறை - Kurai
II. v. i. be short, be missing, wanting, எஞ்சு; 2. diminish, grow scarce, less, dear, சிறுகு; 3. be lowered in rank, estimation etc. கெடு; 4. droop in affliction, வருந்திவாடு; 5. be cut off, வெட்டப்படு; 6. be elided as a letter (Gram.) எழுத்துக்கெடு.
குறைச்சல், (com. குறைதல்), v. n. defect, want, scarcity, dearness. அது குறைச்சலல்ல, it is not dear; it is not less than what is required. குறைச்சலாய் வாங்க, to buy dear; to buy less than what is wanted. குறைச்சலாய்ப், (குறைவாய்) பேச, to speak ill or depreciatingly of a person. குறைந்தபட்சம், at least, not less than. குறையப்பண்ண, to diminish. குறை (குறைந்த) மரக்கால், a scant measure. குறைவு, v. n. defect, poverty, reduction. குறைவானது, that which is defective or unbecoming. குறைவுபடுத்த, to disgrace; to minimise. ஏறக்குறைய, சற்றேறக்குறைய, more or less, about. கொஞ்சங் குறைய, almost.
வண்டு - Vanndu
s. a wasp, chafer or beetle of any kind, சுரும்பர்; 2. an arrow, அம்பு; 3. a fault, குற்றம்; 4. a bracelet, கை வளை; 5. a conch, சங்கு; 6. the 8th lunar mansion, பூசநாள்.
வண்டுகடி, the sting of a wasp; 2. cicatrix of a sting or bite. வண்டு கொல்லி, the name of a tree whose leaves are used to cure cutaneous eruptions. வண்டுணாமலர் மரம், michelia champaca; 2. the வேங்கை tree, pterocarpus. (lit. a flower-tree untouched by beetles). (வண்டு+உண்ணா+மரம்) சிள்வண்டு, a kind of cricket. விளக்குவெட்டி வண்டு, a candle-fly.
செங்கல் - Sengal
s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம்.
செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks. செங்கல் அறுக்க, to mould bricks. செங்கல் மங்கல், dim, red, brown, tawny. செங்கல் மா, brick-dust. செங்கற் சுட, to burn bricks. செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால். செங்கற் பால், brick-dust mixed with water. செங்கற் பொடி, brick-bats. பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.
From Digital DictionariesMore